இன்று இஸ்ரேல் தனது நாடு என்று உரிமை கொண்டாடும் இடம் முழுவதும் ஒரு காலத்தில் பாலஸ்தீன மக்களின் தாயகமாக இருந்த இடம்தான்.
இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்னர் உலகை பல பகுதிகளை தனது காலனி ஆதிக்கத்தின் கீழ் அதிகம் வைத்திருந்த பிரித்தானியா காட்டிய ஆபிரிக்காவின் ஒரு பகுதியில் தமக்கான நாட்டை உருவாக்க மறுத்து பாலஸ்தீனர்களின் நிலங்களில் குடியேற்றத்தை ஆரம்பித் வரலாறுதான் யூத இன மக்களின் வரலாறு.
ஹிட்லரின் யூத அழிப்பை தொடர்ந்து தமக்கான அனுதாபங்களை உலக மக்கிளடம் திரட்டி உலகில் பல்வேறு நாடுகளில் வாழ்ந்த யூதர்களை இணைத்து பாலதீன மண்ணை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டதுதான் இஸ்ரேல் நாடு.
எந்த ஹிட்லர் செய்த கொலைகளின் அனுதாப அலையில் தங்களை நிலை நிறுத்த முற்பட்டார்களோ இதனை விட கொடி செயல்களை இது வரை பாலஸ்தீன மக்களுக்கும் வளைகுடா நாட்டு மக்களுக்கும் செய்து வருவதுதான் இஸ்ரேலின் சியோனிச வரலாறு.
அப்போது எல்லாம் இந்த மேற்குலக நாடுகள் அதனை ஆதரித்து ஐ.நா இல் அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தது.
கூடவே தமது நாடுகளில் தூதரங்களையும் அமைத்து இன்று வரை எந்த கூச்ச நாச்சமும் இன்று குடியேறிய பாலஸ்தீன பிரதேசத்தின் பூர்விகக் குடிகளை பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ துரத்தி கொலை வெறியாட்டம் செய்த இஸ்ரேலின் நடவடிக்கைகள் காணப்பட்ட போது அதனை ஆரம்பத்தில் கிள்ளி எறியாதவர்கள் இவர்கள்
இன்று பாலஸ்தீனர்கள் ஒரு மூலையில் ஒதுங்கி ஒடுங்கி அகதிகளாக பிறந்து அகதிகளாக வாழ்ந்து அகதிகளாக மரணிக்கும் ஒரு இனமாக வந்ததற்கு இவர்கள் யாவரும் காரணம்.
இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி அதனை ஐ.நா சபைதான் உலக நாடுகளிடம் அங்கிகுhரத்திற்கான அழுத்தத்திற்கான உலக சூழலை பயன்படுத்தியது என்றவாறு கடந்த சில நாட்களாக பிரான்ஸ் சொல்லி வந்த நிலையில் தற்போது தனி நாடாக அங்கீகரிதல் என்ற அறிவிப்பு வந்துள்ளது.
தனி நாடாக அங்கீகரிப்பு என்பது தனியான(மட்டும்) நாடாக இருந்த பலஸ்தீனத்தை ஆக்கிரமித்து உருவான இஸ்ரேல் அங்கீகரித்து தனக்கான இடத்தை பிடித்து பலஸ்தீனியர்களை ஒரு மூலைக்குள் குறுக்கியதை அங்கீகரிக்கும் உலக அரசியலின் ஒரு அங்கம்தான் இதனை நாம் பார்க்க வேண்டியுள்ளது.
அப்போ இஸ்ரேல் இத்தனை வருடமாக… தற்போது மிக அதிகம் பாலஸ்தீனர்களை கொலைகள் செய்த போது இஸ்ரேலின் தூதரங்களையும் கனடாவின் ரொரன்ரோ போன்ற நகரங்களில்ளுவ யூதக் குடியிருப்பு பகுதியில் அண்மைய யுத்தம் ஆரம்பித்த போது உடனடியாக சிறப்பு காவல் நிலையம், படையை அமைத்து யூத மக்களை பாதுகாப்பதற்கு எடுத்தது.
இந்த அக்கறையின் ஒரு சதவிகித்தையாவது பாலஸ்தீனர்கள் விடயத்தில் இங்கு மட்டும் அல்ல பாலஸ்தீனத்திலும் எடுக்கவில்லை. தினம் தனம் குழந்தைகள் பெண்கள் மருத்துவ மனையில் நோயாளர்கள் என்று நூற்றுக் கணக்கானவர் செத்தார் குண்டுகளால் பட்டினிச் சாவால்
மாறாக யுத்த தளபாடங்களை அதற்கான ஆதரவுகளை வாரி வாரி வழங்கியது இதெல்லாம் என்ன…? இவை எந்த வகையிற்கள் அடங்கும்
தற்போதைய யுத்தம் ஆரம்பித்த சில நாட்களிலேயே தென் ஆபிரிக்கா சர்வதேச நீதி மன்றத்தில் இஸ்ரேலை யுத்தக் குற்றவாளி என்றாக வழக்கு போட்டு நீரூபிக்க முற்பட்ட போது இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்
சரி இந்த உலகம்…. ட்றம்பின் அமெரிக்கா தவிர்ந்த மேற்கு உலகம் ட்றம்பிற்கு எதிரான அரசியலை நகரத்த முற்படுவதாகவே இதனை அதிகம் பார்க்க முடிகின்றது. ட்றம்பின் இந்த வரியுத்தம் செய்யும் தற்காலிக சலசலப்பு இது. இந்த வரி யுத்தம் நீங்கினால் பைடனின் அமெரிக்காவை இவர்கள் ஆதரிப்பார்கள்.
அப்போது தனிநாடா அப்படி என்றால் என்ன என்றும் கேட்பார்கள்
இவை அத்தனைக்கும் மத்தியிலும் இந்த தனி நாடு அங்கீகாரம் யுத்தம் அற்ற சமாதானத்தை கொண்டு வருமாயின் இருகரம் கூப்பி அதனை வரவேற்போம். இந்த வரவேற்பு பாலஸ்தீன மக்களுக்காக மட்டும் அல்ல இஸ்ரேல் மக்களின் வாழ்வுக்கானதாக அமையும் என்பதினால்.
ஈழ விடுதலைப் போராட்டம் பல அமைப்புகளாக தொடர்ந்த போது பாலஸ்தீன மக்களின் இருப்பிற்கான போராட்டத்திற்கு இடதுசாரி ஈழ விடுதலை அமைப்புகள் பலமான இணைந்து ஆதரவை வழங்கின.
இதற்கு பிரதியீடாக அவர்களும் எமது போராட்டத்திற்கான ஆதரவுகளை வழங்கினர்.
அந்த வேளை எமது விடுதலைப் போராட்டதை அழிப்பதற்காக இலங்கை அரசிற்கும் சில காலம் புலிகளுக்கும் இஸ்ரேல் பயிற்சி வழங்கியது என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிடுவது வரலாற்றிற்கு தேவையாகவும் உள்ளது