இதற்கான முழுக்காரணம் விஜய கட்சி ஆளுனரை சந்தித்து தனது கட்சி உறுப்பினர்களுக்கு அப்பால் அவர்களுடன் இணைந்து செயற்படுவதாக கூட்டணி அமைத்த காங்கிரஸ் உறுப்பினர்களையும் இணைத்து 108 சக 5 என்றாக பெரும்பான்மை இல்லாத எண்ணிக்கையைக் கொடுத்தது.
உடனடியாக ஆளுனர் தனது எஜமானர்களின் விசுவாசப்படி விஜயிற்கு ஆட்சியமைக்கும் வாய்பை வழங்க முடியாது என்றாக மறுத்துவிட்டார்.
விஜய் தனது தேர்தல் பிரச்சாரம் முழுவதும் தீய சக்தி என்று கூறி வந்த திமுக கூட்டணியில் பிரதான கட்சியான காங்கிரசை இணைத்துக் கொண்டுதான் தனது ஆட்சியமைக்க கோரி இருந்தார்.
ஆளுனரின் மறுப்பை தொடர்ந்து அதே தீய சக்தி என்று கூறிய அதே கூட்டணியில் இருந்துதான் எனைய இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், இதற்கும் அப்பால் முஸ்லீம் கட்சியிடம் ஆதரவைக் கோரி அவர்களின் ஆதரவுடன் அந்த 118 என்றான பெரும்பான்மையைப் பெற்றுத்தான் விஜய் முதல் அமைச்சர் ஆகின்றார் தற்போது.
தனது கூட்டணியில் இருந்து தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்ற இந்த கட்சிகளின் முடிவுகளை ஸ்டாலின் எந்த வகையிலும் ‘தடா’ போடவில்லை என்பது இங்கு முக்கிய செய்தி
விஜய் பாசையில் சொல்வதானால் தீய சக்திகளின் ஆதரவில் தூய சக்தி முதல் அமைச்சர் ஆகின்றார்
பாஜக தமிழ் நாட்டு அரசிற்குள் புகவிடாமல் இருப்பதற்காக தமது ஆதரவை வழங்குவதாக விஜய் அழைத்த தீய சக்திகள் கூறி உள்ளார்கள்.
ஆளுனர் கோரிய அறுதிப் பெரும்பான்மையை விஜய் காட்ட முடியாது போனால் அதனைக் காரணமாக்கி குடியரசுத் தலைவரின் ஆட்சி(பாஜக இன் ஆட்சியாக அது இருக்கும்) அல்லது வேறு ஏதாவது வழியில் பெரும்பாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பின்புலத்துடன் தமது ஆட்சி பாஜக நடத்த முற்படுவார்கள் என்றாக காரணங்களை முன்வைக்கின்றனர் விஜய இற்கு ஆதரவு வழங்கும் தரப்பினர்.
இதற்கு அப்பால் ஆட்சி அமைக்க முடியாத சூழலை காட்டி மீண்டும் தேர்தலை நடத்த முற்படுவர் இதற்கு அரசியல் கட்சிகளும் தமிழ் நாட்டு மக்களும் தயார் இல்லை என்றாக காரணங்கள் முன்வைக்கப்படுகின்றது.
இது யதார்த்த உண்மைதான்
எனக்கென்னவோ அவரவர் ‘தீய சக்தி’களாக ‘மேலும் சிலராக’ எதிர் கட்சி வரிசையில் நின்று எதிரிக் கட்சிகளா செயற்படாது விஜய் தனது 108 உடன் ஆட்சியை நடத்துங்கள் என்று அனுமதித்து இருக்க வேண்டும்.
பெரும்பான்மை இல்லாதவிடத்து ஆட்சியிற்கு வெளியே ஆட்சிக் கவிழ்ப்பு என்றாக செயற்படாமல் அரசை பிழையாக செயற்படவிடாது மூக்கணாங் கயிறாக செயற்பட்டிருக்க வேண்டும்.
ஒரு சிறுபான்மை அரசாக சுதந்திரமாக விஜய ஆட்சி செய்ய அனுமதித்து இருக்க வேண்டும்இதுதான் தமிழ் நாட்டிற்கும் தீய சக்திகளுக்கும், தூய சக்திகளுக்கும், மற்றும் சிலருக்கும் சரியாக இருந்திருக்கும்.
இது மக்களும் இந்த ‘தூய சக்தி’,’ தீய சக்தி’கள் பற்றி தேர்தலுக்கு அப்பால் ஆட்சிக் காலத்தில் எடை போடுவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கும்.
இதற்குள் மத்திய அரசின் குழப்பங்களை அடாவடித்தனங்களை உள்ளே வரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சரி முதல் அமைச்சர் ஆகி ஆட்சி அமைப்பதாக முடிவாகிய பின்பு நாம் எவ்வாறு தூய சக்தியின் ஆட்சி நடைபெறுகின்றது என்பதை அவதானித்துதான் பார்ப்போமே.
ஜனநாயகம் எமக்கு வழங்கிய மக்கள் தீர்ப்பு அதுதானே அதனை நாம் மதித்தாக வேண்டும்.
வாழ்த்துகள் புதிய முதல் அமைச்சருக்கும் புதிய மாற்றத்திற்கான ஆட்சியிற்கும்