“ஒண்ணுமில்லை, ஸ்டேண்டர்ட் ப்ரொசீஜர்தான். ஒரு சின்ன சோதனை!” என்று சொல்லி, ‘இந்தியத் துணைத் தூதரின்’ ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கியது அமெரிக்கா. டிஎன்ஏ பரிசோதனை என்று அவரின் உமிழ்நீரை ஆய்வகத்துக்கு அனுப்பினார்கள்.
போதைக்கு அடிமையான நபர்களுக்கான அறையில் அடைத்து வைக்கப்பட்ட அவமானத்தை தேவயானி கண்ணீருடன் விவரித்த இ-மெயிலால் இந்தியா கொந்தளித்தது.அமெரிக்க மார்ஷல்ஸ் சேவை (U.S. Marshals Service) இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.
அப்போது நல்லவேளை, மன்மோகன் பிரதமர். வாய் பேசா பொம்மை என்று – இந்திய ஊடகங்களால் – எதிர்க்கட்சிகளால் – பொய்யாகப் பரிகசிக்கப்பட்டு சித்திரிக்கப்பட்ட மன்மோகன் சிங்.அவர் என்ன செய்தார் தெரியுமா?. புதுடில்லி அமெரிக்கத் தூதரகம் முன்னாலிருந்தகான்கிரீட் பாதுகாப்புத் தடுப்பையெல்லாம்டெல்லி போலிஸை வைத்து அகற்றிக் கடாசினார். இந்தியாவிற்கு வந்த அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர் தலைவர்கள் எவரையும் சந்திக்கக்கூடாது என்று தடை போட்டார். மேலும் அதிரடியாக – அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கான சிறப்புச் சலுகைகள் விமான நிலைய அனுமதிகள் அனைத்தும் தடாலடியாக ரத்து செய்யப்பட்டன.
தேவயானி கோப்ரகடேவுக்கு முழுத் தூதரகப் பாதுகாப்பு (Diplomatic Immunity) கிடைக்கும் வகையில் அவர் ஐநா சபைக்கான பணிக்கு மாற்றப்பட்டார். ‘இந்தியாவின் கண்ணியத்துக்கு எதிராக எந்த சமரசமும் இல்லை’ அமெரிக்காவுக்கு உறுதியுடன் பதிலளித்தது மன்மோகன் தலைமையிலான இந்திய அரசு.
இப்ப எதுக்கு இந்த பழைய ஃபிளாஷ்பேக்?’ஓமன் வளைகுடாவில் ஹோர்முஸ் நீரிணைக்கருகில் -எம்.டி. செட்டபெல்லோ – MT SETTEBELLOஎண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர்’போன வாரம் – ஜூன் 10ஆம் தேதி – அமெரிக்காவின் இந்த அட்டூழியத்தை ஒருவரிச் செய்தியோடு தாண்டிப் போய்விட்டன நம் ஊடகங்கள் .
‘இரான் மீதான முற்றுகைக்கான கடற்படை நடவடிக்கை’ என்ற பேரில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் – இந்தியர்களான – கப்பலின் தலைமைப் பொறியாளர் பட்டனாலா சுரேஷ், எந்திரப் பராமரிப்பாளர் சிவானந்த் சௌரஷியா, டெக் கேடட் பயிற்சியாளர் ஆதித்ய சர்மா மூன்று பேர் கொல்லப்பட்டார்கள்.
செத்தது இந்தியனானாலும் கொன்றது அமெரிக்க ராணுவம்!வாய் திறப்பாரா மோடி ?“அடப்பாவிகளா, பாலஸ்தீனனைக் கொன்றால்தான் வாய்திறக்கமாட்டீர்கள் . இந்தியன் சாகடிக்கப்பட்டாலுமா?” கடும் கண்டனம் எழுந்த பிற்பாடு – வேறுவழியில்லாமல் – ரெண்டுநாள் கழித்து -நம் வெளியுறவு ஜெய்சங்கர் – அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோவுக்கு போன் போட்டார்.
மென்மையான வயலின் இசை ஒலிக்க – மயிலிறகால் வருவது போன்ற குரலில் – “இந்தக் கொலைககளில் நியாயமில்லையே சாரே?” என்றார்.
ரூபியோ சொன்ன மறுமொழி என்ன தெரியுமா? “அமெரிக்காவின் முற்றுகைகளை மீறினால் பொறுத்துக் கொள்ளவே மாட்டோம். எல்லா வர்த்தகக் கப்பல்களும் அமெரிக்கப் பாதுகாப்பு உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்துதான் ஆக வேண்டும்” மறுமுனையில் ?
கப்சிப்.’அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்’.இது நேற்றையத் தமிழ்ப் பழமொழி.’தொடைநடுங்கியும் ராஜா ஆவான்!’.இது இன்றைய இந்தியத் தலையெழுத்து.