இந்தியாவின் பிரதமர் மோடி
இது பற்றி வாய் திறப்பதாக இல்லை.
தமிழ்நாட்டிலும் இளைஞர்கள் இது பற்றி அதிகமாக அக்கறை பட்டதாக தெரியவில்லை.
நீட் தேர்வில் கேள்வித்தாள்கள் கசிந்தது பற்றி பொறுப்பெடுத்து மத்திய உயர்கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவும், கல்வியில் தனி அக்கறை எடுக்கப்படவும் வலியுறுத்தி
சோனம் வாங்சக் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
லடாக்கில் பிறந்த 59 வயது இன்ஜினியரும், சூழலியல் செயல்பாட்டாளருமானவரின் உண்ணாவிரத போராட்டத்தை நாம் அனைவரும் ஆதரிக்க வேண்டும்.
ஒருவேளை தமிழ்நாட்டுக்கும் நீட் தேர்வுக்கும் சம்பந்தமில்லை என்று தமிழ்நாட்டில் இளைஞர்களும் பெற்றோர்களும் நினைத்து விட்டார்கள் போல் இருக்கிறது.
மகாத்மா காந்தி 18 முறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். பட்டியல் இனத்தவருக்காக ஒரு குறிப்பிட்ட சலுகை கொடுக்கக் கூடாது என்று மகாத்மா காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த போது டாக்டர் பி ஆர் அம்பேத்கர் சொன்னார் :
” மகாத்மாக்கள் வந்தார்கள். மகாத்மாக்கள் போனார்கள். ஆனால் தீண்டத்தகாதவன் தீண்டத்தகாதவனாகவே இருக்கிறான். “
ஆனால் மகாத்மா காந்தியின் உயிர் பிரியக்கூடாது என்ற அக்கறையில் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் மனிதாபிமானத்தோடு இறங்கி வந்தார்.
தலித்துகளுக்கு எதிரான காந்தியின் முரட்டு பிடிவாதத்துக்கு இடம் கொடுத்து காந்தியின் உயிரைக் காப்பாற்றினார்.
மகாத்மா காந்தி பிரிட்டிஷ்க்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த போது ( காந்தி செத்தால் பரவாயில்லை என்று சர்ச்சில் சொன்ன போதிலும் ) அப்போதைய பிரிட்டிஷ் வைஸ்ராய் உண்ணாவிரதத்துக்கு மரியாதை அளித்து காந்தியின் உயிரைக் காப்பாற்றினார்.
வரலாற்றின் பின்னணியில் உண்ணாவிரத போருக்கு ஒரு முடிவு கட்டும் விதமாக பாரதப் பிரதமர் உடனே முடிவெடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் நாம் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும்.