காஸ்மீர் பொது மக்கள் மீதான தாக்குதல்

கேள்வி 3: தாக்குதலுக்கு ஒரு மாதம் முன்பு அமித்ஷா தலைமையில் நடந்த காஷ்மீரின் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் அந்த மாநிலத்தின் முதல்வர் உமர் அப்துல்லா மட்டும் வேண்டுமென்றே தவிர்க்கப் பட்டது ஏன்? காஷ்மீரின் சட்டம் ஒழுங்கு ஒன்றிய அரசின் வசம் இருந்தாலும் அங்கு பேசப் படுவதை அந்த மாநில முதல்வர் அறிந்து கொண்டால் என்ன தவறு? அல்லது இந்த தாக்குதலுக்கான திட்டமே அங்குதான் தீட்டப் பட்டதா?

கேள்வி 4: பெகல்காம் டூர் சென்று வந்தவர்கள் அனைவரும் சொல்லும் ஒரே விசயம் அங்கு பாதுகாப்பு அதிகமாக இருக்கும் இராணுவ வீரர்கள் எப்போதும் சுற்றிக் கொண்டே இருப்பார்கள் என்பது. அன்று மட்டும் இராணுவ வீரர்கள் எங்கு சென்றனர்?

கேள்வி 5: அடிபட்டவர்களையும் அங்கிருந்த கஷ்மீரிகள்தான் சுமந்து கொண்டு கீழே இறங்கினர். கடற்படை துணை மார்ஷல் ஒருவர் குண்ட்டி பட்டு 1.5 மணி நேரம் உயிரோடு இருந்திருக்கிறார் எந்த இராணுவ உதவியுமே வரவில்லை எனில் மரணங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டவையா??

கேள்வி 6: அனைத்து ஊடகங்களும் முதலில் இந்துவா என கேட்டு தீவிரவாதிகள் சுட்டதாக கூறிய நிலையில் பிறகு வந்த செய்திகள் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும் எங்கிருந்தோ பதுங்கி இருந்ததுதான் சுட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். எனில் காந்தியை கொலை செய்யப் போகும் போதே ஒரு வேலை தான் சுடப்பட்டு இருந்தால் சுட்டவன் முஸ்லிம் என கலவரம் பரவ வேண்டும் என்று சாவர்கரின் சீடன் கோட்சே கையில் இஸ்மாயில் என பச்சை குத்திக் கொண்டதன் தொடர்ச்சியா இது?

ஆயிரம் ஆயிரம் கேள்விகளை பாதிக்கப் பட்டவர்களும் காஷ்மீரிகளும் ஊடகங்களின் முன் கேட்கின்றனர்.

அவை அனைத்துமே எடிட்டிங் ரூமில் வெட்டப் படுகின்றன எனில் நடப்பவை அனைத்துமே தற்செயலானவை இல்லையா???பதில் இருந்தும் அவர்கள் சொல்ல மாட்டார்கள்…

ஏனெனில் வெறுப்பை தொடர்ந்து விதைப்பதால் மட்டுமே அவர்கள் தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி பெற்று வருகின்றனர்.

இறந்தவர்களில் பலரும் அவர்களுக்கு வாக்களித்தவர்களாக இருக்கலாம்.

ஆனால் அவர்களின் பசியும் வெறியும் இன்னும் அடங்கவில்லை…

RSS இன் நூற்றாண்டு விழா இன்னும் ஏதோ ஓர் பெரிய இலக்கை நோக்கி முன்னேறுகிறது…