தோழர். V A கந்தசாமி அவர்களின் 34 ம் ஆண்டு நினைவு தினம்…

குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக பாடசாலை கல்வியை ஏழாம் வகுப்புடன் நிறுத்திக்கொண்டவர் தொழிற்சங்க இயக்கத்தில் இணைந்து செயலாற்றிய சமயம் கம்யூனிச சித்தாந்தத்தை கற்றுக்கொண்டதுடன் முற்போக்கு எழுத்தாளன் ஆகவும் கவிஞராகவும் திகழ்ந்தது மட்டுமல்லாமல், தலைசிறந்த மேடை பேச்சாளராகவும் விளங்கினார்.

வட பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியையும் , தொழிற்சங்க, வெகுசன அமைப்புகளையும் கட்டியமைப்பதில் முக்கிய பங்காற்றியவர். சாதியில் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில், கம்யூனிச சித்தாந்தத்தை அரசியல் வகுப்புகள் மூலம் அந்தமக்கள் மத்தியில் கொண்டுசென்றதுமல்லாமல் அவர்களை போராட்ட பாதையில் முன்னகர்த்திச் சென்றவர்.

வட பகுதியில் தீண்டாமைக்கு எதிராக 1966 ஆம் ஆண்டில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து முன்னெடுத்த ” சாதி அமைப்பு தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும்” என்னும் கோஷத்தை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட போராட்டதை வழிநடத்துவதில் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுடன் இணைந்து செயலாற்றியவர்.

தோழர் கந்தசாமி அவர்கள் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சோவியத் யூனியன், செக்கோசுலோவேகியா மற்றும் மக்கள் சீனக் குடியரசுக்கும் சென்றதுடன், மகத்தான சீனத் தலைவர் தோழர் மா சே துங் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பைப் பெற்றவர்.

தமது அரசியல் வாழ்வில் பல துன்ப துயரங்களுக்கு முகம்கொடுத்த போதிலும், தொழிலாளி வர்க்க நிலைப்பாட்டில் உறுதியாக நின்றவர். மக்களுடன் மக்களாக வாழ்ந்து, தனக்கென்று எத்தகைய சொத்து சுகங்களையும் சேராது, பொது வாழ்வுக்கும் கம்யூனிஸ்டுக்களுக்கும் சிறந்த உதாரணபுருசராக திகழ்ந்தவர்.

தோழர் பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் அமைப்பின் கட்சியின் முக்கிய தொழிற்சங்க போராளியாக செயற்பட்டவர். புலிகளால அனைத்து இயக்களையும் தடை செய்து ஆயுத தாக்குதல் நடாத்திய போது வடக்கிலும் கிழக்கிலும் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் தலை மறைவாக இருந்து செயற்பட்ட தோழர்களுக்கும் இடையில் இரகசியமாக தொடர்பாடல்களைச் செய்தவர். இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையின் உறுப்பினராக மக்களால் தெரிவு செய்யப்பட்டு மக்களுக்கு தொண்டாற்றிவர். கட்சியை பலப்படுத்தியவர்