அந்தப் பெண்ணின் கணவர் அயல்நாட்டில் மூன்று வருடங்களாக இருக்கிறார் இந்த பெண் இங்கே தனியாக இருக்கிறார் அந்த பெண் மனம் லேசாக சபலப்பட்டு இவருடன் அந்தரங்க உறவு வைத்திருக்கலாமா என்ற நிலையில் சில முயற்சிகள் செய்கிறார் இருவரும் தனியே சந்தித்து மீட்டிங் உணவு என்று கருத்து பரிமாற்றத்தில் இருக்கிறார்கள்
ஆனால் அந்தப் பெண் எப்போது இன்னும் உறவு நெருக்கம் உருவாகும் என்ற ஆர்வத்தை அதிகம் வெளிப்படுத்துவது போல் இவருக்கு தெரிகிறது ஆனால் கண்ணியத்தை விட்டுக் கொடுக்காமல் அந்த பெண்ணுக்கு புரிய வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்
இந்த நிலையில் என்னிடம் ஆலோசனைக்கு வந்தார் அவரது முயற்சியுடன் இருவரையும் conference call வழியே இணைத்து விரிவாக பேசி அவர்களுக்கு புரிய வைத்தேன் நீண்ட தொடர் உரையாடல் உரையாடல் வடிவம் நீக்கி எழுதுகிறேன்
40 வயது பெண்மணி. திருமணமானவர். கணவர் மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டில் இருக்கிறார்தினசரி உரையாடல், உணர்ச்சி ஆதரவு, பாராட்டு, கவனிப்பு, பகிர்வு, பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றின் கலவைதான் திருமண வாழ்க்கை. இந்தக் கலவைக்கு அவசியமான இத்தனை விஷயங்களில் நீண்ட நாள் இடைவெளி அதன் காரணமாக ஏற்படும் குறைபாடு மனதுக்குள் மெல்ல மெல்ல உளவியல் வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது
இந்த சூழலில் இயல்பாக ஒருவர் திட்டமிடாமல் சூழ்நிலை காரணமாக அமைந்து, பேசுவதைக் கேட்டு அறிவுபூர்வமாக விவாதித்து அக்கறையுடன் பேசுகிறார் என்றால் அந்த வெற்றிடம் இந்த பழக்கத்தால் மெல்ல மெல்ல நிரப்பப்படுகிறது
இப்படியாக அந்த வெற்றிடத்தை நிரப்பும் நபர் அந்தப் பெண்ணின் மனதில் ஒரு சிறப்பான இடத்தை பெற தொடங்குகிறார் இது காதல் என்று தவறாக அர்த்தம் செய்து கொள்ளப்படுவதற்கு வாய்ப்பு அதிகம் அது அந்த நிலையில் காதல் இல்லை காமம் இல்லை உணர்ச்சி பசி தீர்க்கப்பட இருக்கிறது என்ற பரபரப்பில் ஏற்படும் தொடர்பு என்னை அணுகிய அந்த ஆணின் மனநிலையில் காமம் காதல் இவை எதுவும் இல்லை
50 வயதில் மற்றும் ஒரு ஆழமான நட்பு அறிவுபூர்வமாக புரிந்து கொண்டு பேசுகிறார் என்ற நிலையில் அந்த 40 வயது பெண்ணுக்கு அதிகம் இடம் கொடுத்து இருக்கிறார் இருவரின் emotional dependency முற்றிலும் மாறுபட்டது தனிமையில் இருக்கும் ஒருவர், தன்னுடைய மகிழ்ச்சி, கவலை, உற்சாகம், அன்றாட அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஒரு குறிப்பிட்ட நபரைத் தேர்வு செய்து விடுகிறார்.
பின்னர் அந்த நபர் பேசாத நாள் வெறுமையாகத் தோன்றும். செய்தி வரவில்லை என்றால் ஏமாற்றம் ஏற்படும். இவ்வாறு emotional dependency அதிகரிக்கும் போது உடல்ரீதியான நெருக்கத்தை நாடும் எண்ணமும் சிலரிடம் உருவாகலாம்.இது கட்டாயமாக காம உணர்ச்சி காரணமாக மட்டுமே உருவாக வேண்டியதில்லை.
“இந்த உறவை இன்னும் உறுதிப்படுத்த வேண்டும்” என்ற மனதின் முயற்சியாகவும் இருக்கலாம்.இந்த நிலையில் அந்த ஆண் எடுத்திருக்கும் நிலைப்பாடு உளவியல் ரீதியாக ஆரோக்கியமானது.
ஏனெனில் அவர் இரண்டு விஷயங்களை புரிந்து கொண்டிருக்கிறார்.முதல் விஷயம்: ஒரு மனிதரின் தனிமையை பயன்படுத்திக் கொள்ளக்கூடாது.இரண்டாவது விஷயம்: இன்று இனிமையாகத் தோன்றும் ஒரு முடிவு, நாளை குற்ற உணர்வு, குடும்ப பிரச்சினை, நம்பிக்கை இழப்பு, சமூக சிக்கல் போன்ற பல விளைவுகளை உருவாக்கலாம்.
ஆழமான உண்மை என்னவென்றால், மனிதர்கள் பல நேரங்களில் ஒருவரை காதலிப்பதில்லை; அந்த நபர் மூலம் தங்களுக்குள் ஏற்பட்ட வேறு ஒருவரால் பலரால் ஏற்பட்டுவிட்ட வெற்றிடத்தை நிரப்ப முயற்சிக்கிறார்கள். அந்த வெற்றிடம் நிரம்பியவுடன் உணர்வுகளும் மாறிவிடலாம்.
இந்தச் விஷயத்தை “காதல்” அல்லது “காமம்” என்று எளிதாக வகைப்படுத்த முடியாது. இது தனிமை, உணர்ச்சி பசி, அங்கீகாரத் தேவை, அறிவுபூர்வ ஈர்ப்பு, emotional dependency, personal boundaries நிர்ணயம் ஆகிய அனைத்தும் ஒன்றாக கலந்துள்ள ஒரு சிக்கலான மனித உளவியல் சூழல்உறவின் வலிமை என்பது வெறும் அன்பு, ஈர்ப்பு, பழக்கம் அல்லது கால அளவை மட்டும் சார்ந்தது அல்ல.
அந்த உறவு எந்த உளவியல் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதையும் பெரிதும் சார்ந்தது.மனிதர்கள் பல நேரங்களில் ஒரு நபருடன் இணைந்திருப்பதில்லை; அந்த நபர் பூர்த்தி செய்யும் அனுபவத்துடன்தான் இணைந்திருக்கிறார்கள்.அவர் இல்லாமல் என்னால் இருக்க முடியாதுஎன்று தோன்றினாலும், ஆழமாக ஆராய்ந்தால்,அவர் தரும் உணர்வு இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லைஎன்பதே உண்மை
இதனால் தேவையின் தன்மை உயர உயர உறவின் பற்றுதலும் அதிகரிக்கும்உறவின் வலிமையை நிர்ணயிப்பது அந்த உறவில் செலவிடப்பட்ட நேரம் அல்ல; அந்த உறவு பூர்த்தி செய்யும் உளவியல் தேவையின் ஆழம்தான் Conference call முடிவில் இருவரும் ஒருசேர ஒரு கேள்வி கேட்டார்கள் லேசான பழைய குற்ற உணர்வுகள் இல்லாமல் இருவரும் பழக முடியுமா குற்ற உணர்வு இல்லாமல் பழக முடியுமா?” என்பது உங்கள் கவலையாக இருக்க வேண்டியது இல்லை .
இருவரும் ஒரே எல்லையை ஏற்றுக்கொண்டு, அதை மீண்டும் மீண்டும் சோதிக்காமல் மதிக்க முடியுமா என்பதுதான் உங்கள் அக்கறையாக இருக்க வேண்டும் ஒருவர் நட்பை விரும்பி, மற்றொருவர் இன்னும் ஆழமான உறவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், வெளிப்படையாக குற்ற உணர்வு இல்லாவிட்டாலும் உள்ளுக்குள் ஏமாற்றம், எதிர்பார்ப்பு, மனக்கசப்பு போன்றவை தொடர்ந்து இருக்கும்.
அப்போது நட்பு சமநிலையாக இருக்காது.குற்ற உணர்வு இல்லாமல் பழகுவது எளிது ஆனால் நிறைவேறாத எதிர்பார்ப்புகள் இல்லாமல் பழகுவதுதான் உண்மையான சவால்.அந்த எதிர்பார்ப்புகள் கரைந்து, உறவின் இயல்பு இருவருக்கும் தெளிவான பிறகே நட்பு இயல்பாக இருக்க முடியும் இருவரும் மறுபடியும் என்னிடம் பேசுவதாக சொல்லி இருக்கிறார்கள்