குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அதன் பின்னணியில் உள்ள சதித் திட்டத்தை ஏன் நிறுவ முடியவில்லை. என்பது குறித்து தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.இந்த வழக்கில் அரசு முன்வைத்த வாதங்கள் 5 புத்தக தொகுப்புகளாக தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த பக்கங்கள் 1,512.
ஆனால் தீர்ப்பு இந்த ஆவணங்களுடனோ அல்லது விசாரணையுடனோ ஒத்துப் போகவில்லை. மாநில அரசு எப்போதும் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக நின்றுள்ளது. போலீசார் இந்த வழக்கை விடா முயற்சியுடன் மேற்கொண்டனர். அரசு தரப்பும், தனது வாதத்தை நீதிமன்றத்தில் வலுவாக வைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.
திலீப் விடுதலைக்கு நடிகைகள் பார்வதி திருவோத்து, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து பார்வதி திருவோத்து வெளியிட்டுள்ள பதிவில், ‘இது நீதியா? அவர் (நடிகை) தனக்காக மட்டுமல்ல. கேரளாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்காகவும் போராடினார். இப்போது நாம் மிகவும் குழப்பமான மற்றும் கவனமான வடிவமைக்கப்பட்ட ஒரு கதையின் முடிவை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்’ என்று பதிவிட்டுள்ளார்.
ரீமாகல்லிங்கல் வெளியிட்டுள்ள பதிவில், முன்பை விட இப்போதுதான் பாதிக்கப்பட்ட நடிகை துணிச்சலுடன் இருக்க வேண்டும். மறைக்கப்பட்ட நீதிக்காக போராட வேண்டியதுள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.
ரம்யா நம்பீசன் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆரம்பத்தில் உண்மை தோற்பது போல் தெரியலாம். ஆனால் இறுதியில் உண்மையே ஜெயிக்கும் என பதிவிட்டுள்ளார்