அப்படி ஒரு புகை
யாழ்ப்பாணம்
கோம்பையன் மைதானத்தில்….
அதனால்
அது ‘புனிதம்’ பெறுகின்றது.
அன்று 1983 இல்
கனத்தையில்
ஜே.ஆர் இட்ட தீ
நாட்டை அழித்து
இன்று 2025 இல்
கோம்பையனில்
அனுர இட்ட தீ
நாட்டை நிமிர்தியது
சீதையை மீட்ட
அனுமான் இட்ட
தீயல்ல…. இது
அனுர வைத்த தீ
மக்களின்
மனகுமுறலால் மூண்ட
வெஞ்சினத் தீ
இன்னும் பல சுடலைகள்
சாதி சமய இன
வேறுபாடுகள் இன்றி
நாடு முழுவதும்
கங்கையில்
குளித்தாக வேண்டும்.