கதிர்காமம் தொடர்பாக 1977 இல் தாக்கல் செய்யப்பட்டு இருந்த வழக்கு

(Tharshanth Rajenthram)

கதிர்காமக்கந்தன் கோயில் சம்பந்தமான பின்வரும் விண்ணப்பத்தை மனுதார் (செ. சுந்தரலிங்கம் உயர் நீதி மன்றத்தில் 1977-ம் ஆண்டு தாக்கல் செய்துள்ளார்:- “பிரசித்த நொத்தாரிசு ஜே. கதிரமான் (து. ஊயனயசயஅயn) 1898-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ம் திகதி எழுதி கைச்சாத்திட்ட 2317 இலக்க உறுதியின் சட்டதிட்ட நிபந்தனைகளின் பிரகாரம் மேலே சொல்லப்பட்ட கதிர்காமக் கோயில்களின் சில கட்டடங்கள், காணி பூமிகள் சட்டரீதியாக நியமிக்கப்பட்ட தர்மகர்த்தாவும், அவற்றை நிர்வகித்து நடத்த உரிமை பெற்றவருமான தத்தாரமகிரி சுவாமியை வெளியேற்றி விட்ட மேற்குறிப்பிட்ட கட்டடங்களையும் நிலபுலன்களையும் உரிமைகொண்டாடி தனக்கே சொந்தமாக்கி கொள்ள முதல் பிரதிவாதி (பிக்க சித்தார்த்த தேரோ) முயற்சித்து வருகிறார். மூல உறுதியின் உண்மையான பிரதி P (பி) இலக்கமிட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.