நிறுவனத்தின் செயல்பாடுகள் பெரும்பாலும் தினசரி அவசரத் தேவைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டு, நீண்டகால அபிவிருத்தி, தன்னிறைவு மற்றும் வருவாய் வளர்ச்சி தொடர்பான திட்டமிடல் இன்றி நிலைத்திருந்தது. இதனால், நிறுவனத்தின் முழுமையான திறன் பயன்படுத்தப்படாத நிலை காணப்பட்டது.
அக்கால கட்டத்தில் நிறுவனம் எதிர்கொண்ட முக்கிய சவால்கள்:
நிர்வாக அமைப்பு ,துறைகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பு இல்லாமை காரணமாக ஏற்பட்ட நிர்வாகத் தடைகள்
நிதி, உபகரணங்கள், மருந்துகள் மற்றும் பராமரிப்பு வசதிகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட வளக் குறைபாடுகள்
நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக உருவான மனிதவளச் சிக்கல்கள்
இந்தச் சூழ்நிலையில், நிறுவனத்தை வெறும் செயல்பாட்டு நிலைமையில் வைத்திருக்காமல்,
நிலையான அபிவிருத்தி (Sustainable Development)
தன்னிறைவு (Self-Reliance)
எதிர்காலத்தை நோக்கிய வளர்ச்சி (Future-Oriented Growth)
என்பவற்றை மையமாகக் கொண்டு முழுமையான மறுசீரமைப்பு மற்றும் துறைத்தோறும் திட்டமிடப்பட்ட அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டது.
- நிர்வாக கட்டமைப்பு வலுப்படுத்தல்
2.1 அபிவிருத்திக்குழு அமைத்தல்
நிறுவன அபிவிருத்தி நடவடிக்கைகள் ஒருவரை மையமாகக் கொண்டு நடைபெறாமல், மக்கள் பங்கேற்பு மற்றும் கூட்டு பொறுப்புணர்வு அடிப்படையில் முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு,25/06/2025 அன்று மாகாண மூலிகைக்கிராமம் மற்றும் கிராமிய சித்த வைத்தியசாலைக்கென ஒரு அபிவிருத்திக்குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவின் மூலம்:
சமூகத்தின் நேரடி பங்கேற்பு
முடிவெடுப்புகளில் வெளிப்படைத்தன்மை
நிர்வாகத்தில் பொறுப்புணர்வு
எனும் அம்சங்கள் நடைமுறையில் வலுப்பெற்று, நிறுவனத்தின் மீதான சமூக நம்பிக்கை கணிசமாக உயர்ந்தது.
2.2 ஆளுநரின் ஆலோசனைக்குழு வருகை மற்றும் மாவட்ட மட்ட ஒருங்கிணைப்பு
மேற்கண்ட காலப்பகுதியில், மாகாண ஆளுநரின் ஆலோசனைக்குழு இரு தடவைகள் மாகாண மூலிகைக்கிராமம் மற்றும் கிராமிய சித்த வைத்தியசாலைக்கு நேரடி கள வருகை தந்து, நிறுவனத்தின் செயற்பாடுகளை விரிவாக ஆய்வு செய்தது.
அவர்கள் குறிப்பாக:
நிர்வாக செயல்திறன்
மூலிகை பயிர்செய்கை விரிவாக்கத் திறன்
வள மேலாண்மை முறைகள்
எதிர்கால அபிவிருத்தி வாய்ப்புகள்
ஆகிய விடயங்களில் முக்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
அதே காலப்பகுதியில், மாகாண மூலிகைக்கிராமத்திற்கென தனித்த ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டு, நீண்டகால அபிவிருத்தி, தன்னிறைவு மற்றும் வருவாய் உயர்வு தொடர்பான முடிவெடுப்புகள் தனி நபர் சார்ந்த முடிவுகளாக அல்லாமல், கூட்டு ஆலோசனை அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டன.
மேலும், நீண்ட காலமாக செயலற்ற நிலையில் இருந்த
கிளிநொச்சி மாவட்ட மூலிகை வளர்ப்பாளர் கூட்டுறவுச் சங்கம் மீள உருவாக்கப்பட்டு, உள்ளூர் மூலிகை விவசாயிகள், மாகாண மூலிகைக்கிராமம் மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்கள் இடையிலான மாவட்ட மட்ட ஒருங்கிணைப்பு வலுப்படுத்தப்பட்டது. - சமூக பங்களிப்பு & சிரமதான நடவடிக்கைகள்
அபிவிருத்திக்குழுவின் வழிநடத்தலில், 10-க்கும் மேற்பட்ட சிரமதான நடவடிக்கைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன.
இதன் மூலம்:
நில அபிவிருத்தி பணிகள் குறைந்த செலவில் மேற்கொள்ளப்பட்டன
பராமரிப்பு செலவுகள் கணிசமாகக் குறைந்தன
நிறுவனத்தின் மீது சமூக உரிமை உணர்வு மற்றும் பாதுகாப்பு மனநிலை உருவாக்கப்பட்டது - மூலிகை பயிர்செய்கை விரிவாக்கம்
நிறுவனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான மூலிகை மூலப்பொருள் தன்னிறைவை அடைவதற்காக, பின்வரும் மூலிகை பயிர்களின் பயிர்செய்கை பரப்பளவு கணிசமாக அதிகரிக்கப்பட்டது:
நெல்லி, தான்றி, புங்கு, ஆடாதோடை, நொச்சி, வாதமடக்கி, திப்பலி,தென்னை, செவ்விளநீர்
இதன் விளைவாக:
எதிர்கால வருவாய் ஆதாரங்கள் உறுதியான அடித்தளத்தில் விரிவடைந்தன - மனிதவள (Human Resource) மேலாண்மை
நீண்ட காலமாக நிலவி வந்த ஆளணி பற்றாக்குறை, நிறுவனத்தின் செயல்திறனை நேரடியாக பாதித்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு, தேவைக் கணிப்புகள் மேற்கொண்டு, உரிய நிர்வாக அனுமதிகள் பெறப்பட்டன.
இதன் விளைவாக:
ஊழியர் எண்ணிக்கை 4 இலிருந்து 8 ஆக உயர்த்தப்பட்டு
சேவை தொடர்ச்சியும், பராமரிப்பு பணிகளின் தரமும் மேம்பட்டது - அடிப்படை கட்டமைப்பு & வசதி மேம்பாடு
நீண்ட காலமாக செயலிழந்திருந்த:
பெயர்பலகைகள்
பிரதான டீசல் நீர் பம்ப்
மீளச் செயற்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, நிறுவனத்தின் அடிப்படை செயல்பாடுகள் சீராக்கப்பட்டன. - நீர் மேலாண்மை & வறட்சி கால தீர்வுகள்
வறட்சி காலங்களிலும் சேவை மற்றும் பயிர்செய்கை பாதிக்கப்படாமல் இருக்க, உள்ள வளங்களை திறமையாகப் பயன்படுத்தி, புதிய நீர் மேலாண்மை உத்திகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் மூலம் தொடர்ச்சியான நீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டது. - வைத்தியசாலை சேவை & தகவல் கட்டமைப்பு நவீனமயமாக்கல்
நிறுவனத்திற்கு தெளிவான திசை நிர்ணயம் வழங்கும் வகையில்:
Vision & Mission உருவாக்கப்பட்டது
Hospital Information & Communication System நவீனமயப்படுத்தப்பட்டது
இதனால் சேவை நிர்வாகம் மற்றும் தகவல் பரிமாற்றம் ஒழுங்குபடுத்தப்பட்டது. - வருவாய் உயர்வு (Revenue Enhancement)
9.1 இலவச விநியோகம் (01–04ம் காலாண்டு)
சமூக நலன் மற்றும் அரச பொறுப்பின் அடிப்படையில்,
LKR 931,673.00 மதிப்புள்ள மூலிகைகள் மற்றும் நாற்றுக்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
9.2 விற்பனை மூலம் வருவாய்
அதே காலப்பகுதியில், திட்டமிட்ட விற்பனை நடவடிக்கைகள் மூலம்
LKR 79,910.00 வருவாய் ஈட்டப்பட்டது.
இவ்விரண்டும் இணைந்து, நிறுவனம் சமூக நலனையும் தன்னிறைவையும் சமநிலைப்படுத்தி செயல்படுவதை வெளிப்படுத்துகின்றன. - நோயாளர் சேவை விபரங்கள்
OPD சேவைகள் : 1,100
நடமாடும் வைத்திய சேவைகள் : 150
மொத்த நோயாளர்கள் : 1,250 - பேரிடர் கால சேவை தொடர்ச்சி
டிக்வா புயல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட காலத்திலும், அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு 5-க்கும் மேற்பட்ட நடமாடும் வைத்திய சேவைகள் இடையறாது வழங்கப்பட்டன. இது நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது. - பண்டிகை, கலாசார & சுற்றுச்சூழல் நடவடிக்கைகள்
சித்திரை புத்தாண்டு, மரநடுகை மாதம், நவராத்திரி, திருக்கார்த்திகை போன்ற நிகழ்வுகள்,
நிறுவனத்தின் சமூக நம்பிக்கையையும் பண்பாட்டு இணைப்பையும் வலுப்படுத்தின. - மருத்துவ & மூலிகை சுற்றுலா மேம்பாடு
நிறுவனத்தை எதிர்காலத்தில் மருத்துவ மற்றும் மூலிகை சுற்றுலா மையமாக மாற்றும் நோக்கில், ஆரம்ப கட்ட திட்டமிடல் மற்றும் வழிகாட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. - முடிவுரை (Conclusion)
27/03/2025 முதல் 31/12/2025 வரை உள்ள காலப்பகுதியில், கல்மடுநகர் மாகாண மூலிகைக்கிராமம் மற்றும் கிராமிய சித்த வைத்தியசாலை ஆகிய இரு நிறுவனங்களும், திட்டமிட்ட நிர்வாகக் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் செயல்திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் மூலம், - நிர்வாக சீரமைப்பு (Administrative Reforms),
- உட்கட்டமைப்பு மற்றும் சேவை அபிவிருத்தி (Institutional & Service Development),
- தன்னிறைவு மற்றும் வள மேலாண்மை (Self-Sufficiency & Resource Optimization),
- வருவாய் உயர்வு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை (Revenue Enhancement & Financial Sustainability)
எனும் நான்கு அடிப்படை தூண்களை மையமாகக் கொண்டு, நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சி பாதைக்கு (Sustainable Development Pathway) திட்டமிட்டு வழிநடத்தப்பட்டுள்ளன.
மேற்படி காலப்பகுதியில், சேவை வழங்கல், மூலிகை உற்பத்தி, இலவச விநியோகம், விற்பனை வருவாய் உருவாக்கம், மனிதவளப் பயன்பாடு மற்றும் சமூக நலன் ஆகிய அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்த முன்னேற்றம் ஏற்படுத்தப்பட்டு, மாகாண அரசின் சுகாதார மற்றும் பாரம்பரிய மருத்துவக் கொள்கைகளுடன் ஒத்திசைவான ஒரு தன்னிறைவு மையமாக இந்த நிறுவனங்கள் மாற்றம் பெறும் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன் மூலம், குறுகிய கால இலக்குகள் மட்டுமல்லாமல், நீண்டகால நிதி நிலைத்தன்மை, சேவை தொடர்ச்சித் தன்மை மற்றும் பொதுமக்கள் நலன் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், ஒரு மாதிரி (Model) மாகாண மூலிகை கிராமம் உருவாக்கப்பட உறுதியாகன அடித்தளம் இடப்பட்டிருப்பதாக உணர்கிறேன்மாகாண மூலிகைக்கிராமம் மற்றும் கிராமிய சித்த வைத்தியசாலையின் நிர்வாக சீரமைப்பு, அபிவிருத்தி, தன்னிறைவு மற்றும் சேவை மேம்பாட்டு நடவடிக்கைகள் பல தரப்பினரின் ஒருங்கிணைந்த பங்களிப்பின் விளைவாகவே வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.
இதன் பொருட்டு,
மாகாண ஆளுநர் அவர்களின் அனுசரணையுடன், சுதேச மருத்துவ திணைக்கள
மாகாண ஆணையாளர் – Dr. T. Sarvananthan அவர்கள் , கணக்காளர் ஊழியர்கள் வழங்கிய நிர்வாக வழிகாட்டுதல், தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஊக்குவிப்புகள் இப்பணிகளின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தன. இதற்காக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
கிளிநொச்சி மாவட்ட சித்த வைத்தியசாலை அத்தியட்சகர் – Dr. Aravinthan அவர்கள் வழங்கிய ஆலோசனைகள், நிர்வாக ஒருங்கிணைப்பு மற்றும் மருத்துவ சேவை சார்ந்த வழிகாட்டுதல்களுக்கும் உளமார்ந்த நன்றியை பதிவு செய்கிறேன்
சுகாதார அமைச்சின் செயலாளர்,
உதவி செயலாளர் மற்றும்
திட்டமிடல் பிரிவு அதிகாரிகள் வழங்கிய கொள்கை ஆதரவு, திட்ட அனுமதிகள் மற்றும் நிர்வாக வசதிகள் இந்நிறுவனத்தின் அபிவிருத்திப் பாதையை துரிதப்படுத்தியமைக்கு நன்றியுடன் நினைவுகூர்கிறேன்
மாகாண மூலிகைக்கிராம ஆலோசனைக்குழு,
அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும்
ஆளுநரின் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் வழங்கிய கூட்டு ஆலோசனைகள், கள ஆய்வுகள் மற்றும் தொடர்ச்சியான வழிகாட்டுதல்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்
கிளிநொச்சி மாவட்ட மூலிகை வளர்ப்பாளர் கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், உள்ளூர் மூலிகை விவசாயிகள் மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்கள் வழங்கிய ஒருங்கிணைப்பு,
நிறுவனத்தின் மருத்துவர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், கள ஊழியர்கள், நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் அனைவரும் குறைந்த வளங்களிலும் பொறுப்புணர்வுடன், அர்ப்பணிப்புடன் பணியாற்றியமைக்கு எனது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
மேலும், உள்ளூர் சமூக மக்கள், தன்னார்வலர்கள் மற்றும் பயனாளர்கள் சிரமதான நடவடிக்கைகள், சமூக ஆதரவு மற்றும் ஊக்குவிப்பு வழியாக வழங்கிய ஒத்துழைப்பிற்காகவும் நன்றியுடன் நினைவுகூரப்படுகின்றனர்
இவ்வனைவரின் கூட்டு முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மை காரணமாகவே,
கல்மடுநகர் மாகாண மூலிகைக்கிராமம் மற்றும் கிராமிய சித்த வைத்தியசாலை இன்று ஒரு மாதிரி (Model) மாகாண சித்த மருத்துவ மற்றும் மூலிகை அபிவிருத்தி நிலையமாக வளர்ச்சிப் பாதையில் உறுதியாக முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கதாகும்
சுதேச வைத்திய சேவையிலுள்ள
Dr இரா மனோராஜ் BSMS (Hons) Jaffna
மாகாண மூலிகைக்கிராமம்
கிராமிய சித்த வைத்தியசாலை
கல்மடுநகர்