அமெரிக்காவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கியது சீனா

இந்த நடவடிக்கை, 2026 ஆம் ஆண்டை முன்னிட்டு சீனா-அமெரிக்கா இடையேயான வர்த்தக பதற்றங்களை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இரட்டை பயன்பாட்டுக்குரிய கிராஃபைட் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட கடுமையான சரிபார்ப்பு நடைமுறைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இதனுடன், ஒக்டோபர் 9 இல் அறிவிக்கப்பட்ட சில அரிய பூமி உலோகங்கள் மற்றும் லித்தியம் பேட்டரி பொருள்கள் மீதான கட்டுப்பாடுகளும் சீன அரசு தற்காலிகமாக நீக்கியுள்ளது.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் இடையேயான சமீபத்திய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.