அமெரிக்க-ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை வரவேற்கிறது

இந்தப் போர்நிறுத்தம், பதற்றத்தைத் தணிப்பதற்கும், நீண்டகாலப் பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மையை நோக்கியும் எடுத்துவைக்கப்பட்ட குறிப்பிடத்தக்கதொரு படியாகும். இதில் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதும், பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சிக்கான கட்டமைப்பொன்றை உருவாக்குவதும் உள்ளடங்கும். இராஜதந்திரத்தின் மூலம் முரண்பாடுகளை அமைதியான முறையில் தீர்ப்பதை இலங்கை வலுவாக ஆதரிப்பதுடன், இந்நடவடிக்கை இப்பிராந்தியம் முழுவதும் நீடித்த அமைதியை வளர்க்கும் என்று உறுதியாக நம்புகிறது.

மத்தியஸ்தர்களாக முக்கியப் பங்காற்றிய பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு மற்றும் கட்டார் அரசுக்கும், இந்த வெற்றிகரமான இராஜதந்திர ரீதியிலான தீர்மானத்தை எட்டுவதற்கு உறுதுணையாக இருந்த அனைத்துப் பங்காளிகளுக்கும் இலங்கை தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

Leave a Reply