அமெரிக்கா மற்றும் கட்டார் நாடுகளின் தூதரகப் பிரதிநிதிகள் ஈரானின் மறைமுக உதவியுடன் இந்த உடன்பாட்டை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, தெற்கு லெபனானின் நபாத்தியா மாவட்டத்தின் பல நகரங்கள் மீது நேற்றுமுன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை இந்த தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் நடத்தி உள்ளது. வான்வழித் தாக்குதலோடு பீரங்கித் தாக்குதல்களும் நடந்ததாக அப்பகுதி மக்கள் ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் இராணுவ வீரர்கள் 4 பேர் ஹிஸ்புல்லா படையினரால் கொல்லப்பட்டமையை அடுத்து, பதில் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் அமெரிக்கா – ஈரான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்படவிருக்கும் இதே வாரத்தில், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள இந்த இஸ்ரேல் – லெபனான் போர்நிறுத்தம், மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நீடித்து வரும் போர்ப் பதற்றத்தைத் தணிப்பதில் மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.