உணவகத்தில் தாக்குதல்: கணவன் பலி: மனைவி படுகாயம்

உணவகத்தில் இறந்தவரின் மனைவிக்கு நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்றபோது, உணவகத்தின் உரிமையாளரும் மேலும் இரண்டு பேரும் தம்பதியினரைத் தாக்கியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த மனைவி திவுலபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தலைமறைவான சந்தேக நபர்களைக் கைது செய்ய விசாரணைகள் நடந்து வருகின்றன.