உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலாம் இடம்பெற்ற மாணவர்களின் விபரம்…

2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.இந்தப் பரீட்சையில் 2 இலட்சத்து 63 ஆயிரத்து 550 பேர் தோற்றியுள்ளனர். இலங்கையில் மாவட்ட ரீதியில் முதலாம் இடம் பெற்ற மாணவர்களின் விபரம் இதோ..

வவுனியா மாவட்டம்
வவுனியா மாவட்டத்தில் கணிதம், விஞ்ஞானம், கலைப்பிரிவுகளில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்றுள்ளனர்.

கணிதப்பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று சிவதுர்க்கா சத்தியநாதன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் (குறித்த மாணவி விபத்தில் பலியாகிவிட்டார்). துவாரகா பகிரதன் 3 ஏ பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடத்தினையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை விஞ்ஞான பிரிவில் மதுரா தனபாலசிங்கம் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பவதாரனி சிவபாலராஸா 3 ஏ சித்திகளை பெற்று இரண்டாமிடத்தினையும் பெற்றுள்ளார்.

வர்த்தக பிரிவில் ஆங்கில பிரிவில் தேவகி பிரபுராஜ் மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தினையும் கலைப்பிரிவில் ஆரவி தசஅவதாரசர்மா 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பெற்றுள்ளார்.

மாத்தறை மாவட்டம்
2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் உயிரியல் பிரிவில் மாத்தறை – ரஹூல கல்லூரியின் மாணவன் ஆர்.ஜெ.நிஷல் புன்சிறி முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

வர்த்தக பிரிவில் ஆனந்த கல்லூரியின் மாணவன் முதித அகலங்க முதலாம் இடத்தை பெற்று கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டம்
யாழ்ப்பாணம் – மானிப்பாய் இந்து கல்லூரியின் மாணவன், பத்மநாதன் குருபரேஷன், கலைப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும், தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தையும் பெற்று கொண்டுள்ளார்.

பொறியியல் தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றிய யாழ்ப்பாணம் – சுன்னாகம் – ஸ்கந்தவரோதய வித்தியாலயத்தின் மாணவன், கனகசுந்தரம் யதுர்சாயன் முதலிடம் பெற்றுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவு மற்றும் கணிதப்பிரிவில் புதுகுடியிருப்பு மத்திய கல்லூரி முதலிடத்திடம் பெற்றுள்ளதாக கல்வித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறை மாவட்டம்
அம்பாறை மாவட்டம் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை விஞ்ஞானப்பிரிவில் தேசிய மட்டத்தில் 3ஆம் இடத்தினையும், மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

இம்முறை மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும், தேசிய மட்டத்தில் 3ஆம் இடத்தினையும் பத்மகைலைநாதன் டிலூஜன் 3 ஏ தர சித்திகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இது போன்று ஏனைய மூன்று பிரிவுகளிலும் (காலை, வர்த்தகம், கணிதம்) இம்முறை 3 ஏ தரச்சித்திகளை பெற்று கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை சதனை படைத்துள்ளதுடன் அனைத்து பிரிவுகளிலும் அதிகூடிய மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது .

நுவரெலியா மாவட்டம்
நுவரெலியா மாவட்டத்தில், நுவரெலியா கோல்புறுக் பாடசாலை மாணவி கலைப்பிரிவில் முதலிடத்தை பெற்றுள்ளதாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவி 3 ஏ தர சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

கண்டி மாவட்டம்
ஆங்கில மொழி மூலப் பரீட்சையில் கண்டி பெண்கள் பாடசாலையின் ஆர்.இந்தீவரி கலைப் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலத்தில் மாவட்ட மட்டத்தில் கணிதப் பிரிவில் முதலாம் இடத்தினை நாகராஜன் கிருத்திக்கன் பெற்றுள்ளார்.

குறித்த பாடசாலையில் அதிகமான மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். முழுமையான தகவல் கிடைக்கவில்லை.

அத்துடன் அகில இலங்கை ரீதியாக தொழிநுட்ப பாடத்துறையில் 3வது இடத்தினையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தினையையும் ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவி இல்யாஸ் பாத்திமா அரூசா என்ற மாணவி பெற்றுள்ளார்.

சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் தகவல் தொழிநுட்ப பிரிவில் மாவட்ட மட்டத்தில் 3வது, 6வது, 18வது, 34வது இடத்தினை பெற்றுள்ளார்கள்.

அத்துடன கலைப் பிரிவில் இருவரைக்கும் 2 மாணவர்களின் பெறுபேறுகளும் விஞ்ஞானப் பிரிவில் 2 மாணவர்களின் பெறுபேறுகளும் வெளியாகியுள்ளது.
திருகோணமலை மாவட்டம்
உயர்தரப் பரிட்சையில் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் “மஹ்தி றொசான் அக்தார்” சாதனை படைத்துள்ளார்.

உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் மாவட்டத்தில் 1ஆம் இடமும் தேசியத்தில் 2ஆம் இடமும்பெற்று சாதனையை நிலைநாட்டியள்ளார்.

விஞ்ஞான பிரிவில் கிண்ணியாவை சேர்ந்த “மஹ்தி றொஸான் அக்தார் ” மூன்று பாடங்களிலும் ஏ தரம் சித்தி பெற்று தேசிய மட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் இடத்திலும் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்ற இவர் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டம்

கிளிநொச்சி வட்டக்கச்சி மகாவித்தியாலய மாணவி காசிலிங்கம் தனுசா இரண்டு ஏ,பி பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் நிலையை பெற்றுள்ளார்.

உயிரியல் தொழிநுட்ப பிரிவில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரன் ஏ, இரண்டு பி பெறுபேறுகளை பெற்று மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளார்.

வணிகப்பிரிவில் கிளிநொச்சி சென்திரேசா பெண்கள் கல்லூரி மாணவி கந்தசாமி டிலக்சிகா மூன்று ஏ பெறுபேறுகளை பெற்று முதல் நிலையை பெற்றுள்ளார்.