மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் (தலைவர்) ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு புதன்கிழமை (24) அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, முன்னாள் ஜனாதிபதி சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தனது வாய்மூல சமர்ப்பணங்களைத் தொடர்ந்தார்.
அதன் பின்னரே மனு மீதான மேலதிக விசாரணை, ஜூலை 6-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.