உள்ளங்கையில் மறைக்கக்கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் கைது

குறித்த துப்பாக்கி பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட பிரவுனிங் வகை என தெரியவந்துள்ளது.

வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழிலதிபர் ஒருவரிடம் துப்பாக்கி இருப்பதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய சந்தேக நபரின் வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது குறித்த துப்பாக்கி  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரித்தபோது, ​​அவரது  தந்தையிடமிருந்து இதைப் பெற்றதாகவும், தந்தை தற்போது உயிருடன் இல்லை எனவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.   

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.