எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “இந்த மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் எதுவும் இருக்காது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்” என்று கூறினார். மார்ச் 21 நள்ளிரவில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டன. அதன்படி, ஆட்டோ டீசல் விலை லீட்டருக்கு ரூ. 79 உயர்த்தப்பட்டு ரூ. 382 ஆகவும், சூப்பர் டீசல் விலை லீட்டருக்கு ரூ. 90 உயர்த்தப்பட்டு ரூ. 443 ஆகவும், ஆக்டேன் 95 பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ. 90 உயர்த்தப்பட்டு ரூ. 455 ஆகவும், ஆக்டேன் 92 பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ. 81 உயர்த்தப்பட்டு ரூ. 398 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது