எரிபொருள் விலை: அதிரடி அறிவிப்பு இதோ…

மார்ச் மாத இறுதியில் எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்த்தப்படாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (சிபிசி) தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர், அடுத்த எரிபொருள் விலை திருத்தம் உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளின் அடிப்படையில் அரசாங்கத்தால் செய்யப்படும் என்று கூறினார்.