கடந்த கால குற்றங்களுக்கு பிரபாகரன் உள்ளிட்ட புலிகளே பொறுப்பு சொல்ல வேண்டும் – ரணில்

கடந்த கால குற்றச் செயல்களுக்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பு சொல்ல வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஹைட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொருளாதார தடைகள் விதிக்கப்படும், யுத்தக் குற்றச் செயல் நீதிமன்றில் ஆஜர்படுத்தி தண்டிக்கப்படுவர் ஆகிய அச்சத்திலிருந்து நாட்டு மக்களை அரசாங்கம் விடுவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் ஆணையின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளுக்கு புலிகள் இயக்கமே பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஒரு தரப்பினர் மீது மட்டும் குற்றச்சாட்டுக்களை சுமத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையில் இராணுவம் பற்றி சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே அவர் இந்தக்; கருத்தை வெளியிட்டுள்ளார்.