கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை செய்த ரஷ்யா

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தூர கிழக்கில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள இலக்குகளை தாக்கியதாக அவரிடம் கூறப்பட்டது.

புதிய வளாகம் மிக உயர்ந்த தந்திரோபாய மற்றும் தொழில்நுட்ப பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் அனைத்து நவீன ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு முறைகளையும் முறியடிக்கும் திறன் கொண்டது எனவும் புடின் கூறினார்.

சர்மட் என்பது ஒரு புதிய கனரக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாகும். 

இது தொடர்பில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோளிட்டு Interfax செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஏவுகணை வெளியீட்டின் நோக்கங்கள் முழுமையாக அடையப்பட்டன. திட்டமிடப்பட்ட செயல்திறன் விவரக்குறிப்புகள் விமானத்தின் அனைத்து கட்டங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டன.”

க்ராஸ்நோயார்ஸ்க் பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள ரஷ்யாவின் மூலோபாய ஏவுகணைப் படைகளின் படைப்பிரிவு புதிய ஏவுகணையுடன் ஆயுதம் ஏந்துவதற்கு தயாராகி வருவதாகவும் அது மேலும் கூறியுள்ளது.