கடந்த 36 வருடங்களாகத் தமது காணிகளை இழந்த மக்கள், இராணுவத்தின் வசமுள்ள நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்திக் குறித்த போராட்டத்தைச் செய்து வருகின்றனர்.
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகளையும், வர்த்தக நிலையங்களையும் அமைத்துச் சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றது. இதனால், நீண்ட காலமாக நிலங்கள் மற்றும் வீடுகள் இன்றி வாழ்ந்து வரும் மக்கள், “தமது காணிகளையும் வீடுகளையும் மீட்டுத் தர வேண்டும்” என்று கோரி இப்போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.