கால்பந்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற மிகச்சிறிய நாடு

‘பி’ பிரிவில் ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டனில் அரங்கேறிய குராக்கோ- ஜமைக்கா அணிகள் இடையிலான கடைசி ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. லீக் முடிவில் உலக தரவரிசையில் 82-வது இடத்தில் உள்ள குராக்கோ 3 வெற்றி, 3 டிராவுடன் 12 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் முதலிடம் பிடித்து முதல்முறையாக உலகக் கோப்பை போட்டிக்குள் கால்பதித்தது.

கரிபீயன் தீவுகளில் ஒன்றான குராக்கோவில் தற்போது 1 லட்சத்து 56 ஆயிரத்து 115 மக்கள் வசிக்கிறார்கள். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு ஐஸ்லாந்து தகுதி கண்ட போது அந்த நாட்டின் மக்கள் தொகை 3 லட்சத்து 50 ஆயிரமாக இருந்தது. அதுவே முன்னதாக உலக கோப்பை போட்டிக்குள் கால்பதித்த குட்டி தேசமாக இருந்தது.