‘குடிநீர்ப் பிரச்சினையால், பெண்கள் கருத்தரிக்கும் வீதம் குறைந்துள்ளது’

அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழில் குடிநீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. அதனாலே நான் ஆளுநராக இருக்கும் இக்கால பகுதிக்குள் அதற்கு ஒரு தீர்வினை பெற வேண்டும் என முழு வீச்சாக நடவடிக்கைகளில் இறங்கியுள்ளேன்.

யாழில் பெண்களின் கருத்தரிப்பு வீதம் குறைவடைந்து வருகின்றது. இங்கிருந்து பலர் கருத்தரிப்புக்காக இந்தியாவிற்கு மருத்துவம் செய்வதற்காக செல்கின்றார்கள். இதற்கு குடிநீர் பிரச்சனையும் ஒரு காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

இங்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் என விநியோகிக்கும் நீர் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதில்லை. அதனை கண்காணிக்கும் பொறிமுறைகள் இல்லை. வடமராட்சி நீரேரியில் உள்ள நன்னீரை தேக்கும் முகமாக பாரிய குளம் ஒன்றினை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 21ஆம் நூற்றாண்டில் கட்டப்படும் மிக பெரிய குளம் அதுவாக தான் இருக்கும் என நினைக்கிறேன். அந்த குளத்தின் சுற்றளவு சுமார் 9 கிலோ மீற்றர் ஆகும். அதன் அணைக்கட்டுக்கள் கொங்கிரீட் போட்டே கட்டப்படவுள்ளது என தெரிவித்தார்.