சட்டத்தரணிகளான திலக் மாரப்பன, அனுஜா பிரேமரத்ன, உப்புல் ஜெயசூரியா, அலி சப்ரி மற்றும் வழக்கறிஞர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்காக ஆஜராகின்றனர். மேற்படி சட்டத்தரணிகளுடன், சுமார் 300க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தில் பிரசன்னமாய் உள்ளனர்.
கொழும்பு, கொம்பனிவீதி உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு தரப்பினர் நீதிமன்றத்துக்கு அருகில் கூடியுள்ளனர்.
இதனையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் அதிகளவில் கொழும்பில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கொழும்பை சுற்றியுள்ள பகுதகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.