சாப்புச் சட்டத்தை மீறினால் சட்டம் பாயும்

பொத்துவில் வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் பொலிஸாருடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு அமைய ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சாப்புச் சட்டம்  அமலாகும்  என  அதிகாரபூர்வமாக  அறிவித்தார்.

அதேவேளை, சிங்கள  பாடசாலையிலிருந்து, பொத்துவில்  பிரதேச  செயலகம்  வரையும், பிரதான  வீதியிலிருந்து  அல்  நஜாத்  பள்ளிவாசல்  வரையும், பிரதான வீதியிலிருந்து சட்டாம் பியர் சந்தி வரையும், பிரதான வீதியிலிருந்து முர்சானா சந்தி வரையும்,பொத்துவில் சுற்று வட்டத்தில் இருந்து பொலிஸ்  நிலையம் வரையும் மருந்தகங்கள், பழக்கடைகள், உணவகங்கள்  பிற்பகல் பகல் 01.00 மணிக்கு பிறகு திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, தெரிவித்தார்.

சாப்புச் சட்டத்தை  மீறுவோருக்கு  எதிராக சட்ட  நடவடிக்கை  எடுக்கப்படும்  எனவும் தெரிவித்தார்