செட்டிக்குளம் பிரதே சபையை மீட்க தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றுபடுமா?

செட்டிக்குளம் பிரதே சபையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு – 05, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி – 04, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பான ஈபிஆர்எல்எப் – 03, ஐக்கிய தேசிய கட்சி – 02, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 01, முஸ்லிம் காங்கிரஸ் -01, பொதுஜன பெரமுன – 01 என 17 உறுப்பினர்கள் உள்ளனர்.

தற்போது ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆதரவுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி (07 உறுப்பினர்கள் ஆதரவுடன்) ஆட்சியமைத்துள்ளது.
இதன்போது, தமிழர் விடுதலைக் கூட்டனி சார்பான ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய மக்கள் முன்னணி (04 உறுப்பினர்கள்) என்பன நடுநிலை வகித்து, சுதந்திர கட்சி ஆட்சிக்கு வழிசமைத்திருந்தது.

இந்நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நாளை (12) நடைபெறவுள்ள நிலையில் தமிழ்த் தேசிய கட்சிகளான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பான ஈபிஆர்எல்எப், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பன ஒன்று சேர்ந்தால் 9 உறுப்பினர்கள் இணைந்து வாக்களித்து, வரவு-செலவுத் திட்டத்தை தோல்வி அடையச் செய்வதுடன், ஆட்சியையும் தென்னிலங்கை கட்சியிடம் இருந்து கைப்பற்ற முடியும் என தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.