டில்லி மட்டுமின்றி, ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் நேற்று புழுதிப் புயல் தாக்கியது. பாலம் பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் காற்றின் வேகம் 92 கிலோ மீற்றர் ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், டிதில்லியின் பல்வேறு பகுதிகளில் 70 – 90 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மரங்கள், மின் கம்பங்கள், பலவீனமான கட்டடங்கள் ஆகிய பகுதியைவிட்டு விலகி இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இமயமலைப் பகுதியை பாதித்து வரும் ‘மேற்குத் திசை இடையூறு’ எனப்படும் வானிலை மாற்றமே இதற்கு காரணம் என்று வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்