நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதால், நோய் பாதிப்பு அதிகம் உள்ள வலயங்களில் அமைந்துள்ள அரச, அரை அரச மற்றும் தனியார் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களை ஆகக்குறைந்தது இரு வாரங்களுக்கு மூடி, குறித்த வளாகங்களைச் சுத்தப்படுத்துவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகளுக்கான தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.