’ட்ரம்பின் 28 அம்ச திட்டம் அமைதியை ஏற்படுத்தும்’

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்கான 28 அம்ச அமைதி திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, அமெரிக்கா முன்வைத்துள்ள, இந்த 28 அம்ச சமாதான திட்டத்தை போர் நிறுத்தத்திற்கான தொடக்க புள்ளியாக ஏற்றுக் கொள்வதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.

ஆனால், உக்ரைன் இந்த சமாதான திட்டத்தை ஏற்க மறுத்தால், ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறும் எனவும், குபியான்ஸ்க் நகரை கைப்பற்றியது போல் மற்ற முக்கிய பகுதிகளையும் கைப்பற்றுவோம் என புடின் வெளிப்படையாக அச்சுறுத்தியுள்ளார்.