தனியார் வங்கியில் கோடிக்கணக்கில் கடன் மோசடி: 9 ஊழியர்கள் கைது

கடந்த 2012 முதல் 2019 வரையான காலப்பகுதியில் இந்த நிதி முறைகேடு இடம்பெற்றுள்ளது. போலி ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்களைத் தயாரித்து சட்டவிரோதமான முறையில் கடன் பெற்று இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு வங்கியின் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து நீண்டகாலமாக நடைபெற்று வந்த விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் 6 ஆண்களும் 3 பெண்களும் அடங்குவர். 32 முதல் 58 வயதுடைய இவர்கள், மோசடிக்கு உடந்தையாக இருந்து போலி ஆவணங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (மே 13) கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு, தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான பிணை வழங்கப்பட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகளை செப்டம்பர் 23 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Leave a Reply