தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம்களில் கொரோனா

முகாம் அமைப்பு முறையின் காரணமாக ஒருவருக்கு ஆரம்ப தொற்று கண்டறியப்பட்டால், அவர் சுய தனிமைப்;டுத்தலை அவரது வீட்டிலே ஏற்படுத்தி மற்றவர்களுக்கு பரவாமல் தன்னைதானே காத்துக்கொள்ளும் நிலைமைகள் குறைவாகவே உள்ளது.
முகாமினுள் தனிமைப்படுத்தலை செய்யும் பொதுக்கட்டிடங்கள் இருக்கின்ற போதும்.தொற்றாளருக்கு கழிவறைகளை பயன்படுத்துவதில் பிரச்சனை உள்ளது ஏனெனில் பெரும்பாலான முகாம்களில் கழிவறைகள் பொதுப் பாவனைக்காக கட்டப்பட்டுள்ளது.இருந்தும் சில முகாம்களில் உள்ள நிர்வாகத்தினர் முகாமினுள் நோயாளிகளை தனிமைப்படுத்த பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.முகாமினுள் சில கடைகள் இருந்தாலும் மக்களுக்கு அது போதுமானதாக இல்லை என்ற காரணத்தால் முகாம் மக்கள் முகாமிற்கு அண்மையில் இருக்கும் ஊர்காhரர்கள் கரடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கவது வழக்கமாக உள்ளது. அத்துடன் வெளி வியாபாரிகள் முகாமிற்குள் சென்று பொருட்கள் விற்பதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.முகாமில் உள்ளவர்கள் வெளியில் சென்று பல வகை தொழில்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.இவற்றால் முகாம்களில் கொரோனா பரவல் ஏற்பட்டிருக்;கலாம் என பலராலும் நம்;பப்படுகிறது.

முகாம்களில் சில தொண்டு நிறுவனங்கள் முகாம் மக்களின் வாழ்வினை மேம்படுத்தவது தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுவருகிறது அதில் குறிப்பிடும்படியாக மக்களுடன் இணைந்து இக்காலகடட்டத்தில் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் செய்யும் பணி வரவேற்கத்தக்கதாகவும் காலத்துக்குக்கு பொருத்தமானதாவுகம் உள்ளது.

தற்போது சில முகாம்களில் கொரோனா தொற்றின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் சில இறப்புகளும் நடைபெற்றறுள்ளது.சிவகங்கை மாவட்டம் காரையூர் முகாமில் அடுத்தடுத்து.மூன்று இறப்புகள் கொரோனாவால் ஏற்பட்டது என்பது முகாம் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

இதன்காரணமாக அகதிகளுக்கு பொறுப்பாக உள்ள அகதிகள் மறுவாழ்வுத் துறையினருக்கு கவலையை ஏறபடுத்தி அவர்களது அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட நிர்;வாகத்தினர் துரிதாமாக செயல்பட்டு முகாமில் அதிக கவனம் செலுத்தி கொரோனா பரிசோதனைகள் செயதனர். பரிசோதனையில் அச்சப்படும் முடிவுகள் இல்லை என்ற தகவல் கிடைத்தது.

முகாமில் உள்ள நிர்வாகம்,முகாம் இளஞைர்கள்.முகாம் பெண்கள் சுய உதவிக்குழுக்கள்,தன்னர்வலர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.கபசுர குடிநீர் வழங்கல். மக்களை கொரானா பரவாமல் இருப்பதற்கான உலக சுகாதார நிறுவனத்தால் வெளியிட்ட நடைமுறைகளை கடைப்பிடிக்;கும் படி மக்களுக்கு ஆலோசனை வழங்குதல்,முகாம் சுற்றுபுறச்சூழில் நோய் தடுப்பு கிருமிநாசினி தெளித்தல்,வெளியாட்கள் உள்ளே வராமல் இருக்க தடுப்பு நடவடிக்கைள் போன்ற நடிவடிக்கைளளில் ஈடுபட்டு வருகின்றனர்.மாவட்ட அதிகாரிகளுடன் நல்ல தொடர்பில் இருந்து வரும் முகாம் நிர்வாகத்தினர்,இதன் மூலம் தமிழக அரசின் உதவிகளை முகாம் மக்களுக்கு பெற்றுக்கொடுத்து வருகின்றனர்.

இந்த அசாதரண சூழலிலும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்,வேடர்காலணி முகாம்; மக்களிடம் முகாம் நிர்வாகம்,சுய உதவிக்குழுக்கள் தமிழக அரசுக்கான கொரோனா நிவாரணமாக ரூ.12500 திரட்டியுள்ளனர்.இம் முகாமில் 254 குடும்பங்களைச் சேர்ந்த 852 நபர்கள் வாழந்து வருகிறார்கள்
நிவாரணத் தொகையினை முகாம் வருவாய் ஆய்வாளர் திரு.நடராஜன் அவர்களிடம் முகாம் தலைவர் திரு.வசந்தராஜன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த விமலாதேவி,மரியபுஸ்பம் ஆகியோர் வழங்கியுள்னர்.

(அருளம்பலம்-விஜயன்)