தமிழக கடலோர பகுதிகளை உஷார்படுத்த எச்சரிக்கை

இராணுவ மற்றும் அரச அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு ராஜபக்‌ஷ குடும்பத்தினரால் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலால் தமிழர்கள் பகுதி பற்றி எரிந்தது என்றும் அந்த செய்திகள் தெரிவித்தன.

இலங்கையில் நிலவும் சம்பவங்களையும் இந்த சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி அகதிகளுடன் தேச விரோதிகளும் நுழையலாம் என ஒன்றிய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக கடலோர பகுதிகளை உஷார்படுத்த வேண்டும். இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

இலங்கையில் இருந்து தப்பிய 58 சிறைக்கைதிகள் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பு உள்ளது. 

விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், போதைப்பொருள் கும்பல் கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது. 

எனவே, தமிழக கடலோரப்பகுதிகளை தீவிர கண்காணிப்பில் தமிழக அரசு வைத்திருக்க வேண்டும் என தமிழக காவல்துறைக்கு ஒன்றிய உள்துறை அறிவுறுத்தியுள்ளது.

உள்துறை எச்சரிக்கையை தொடர்ந்து கடலோர ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.