தமிழ் தேசிய கூட்டமைப்பில் மூவருக்கு அமைச்சுப் பதவி!

புதிய தேசிய அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவி, பிரதிக் குழுக்களின் தவிசாளர் பதவி ஆகியவற்றுக்கு மேலாக மாவட்ட அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட்டு உள்ளன. ஜே. ஆர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்ட அமைச்சர்கள் முறைமையை செழுமைப்படுத்தி மீண்டும் அமுலுக்கு கொண்டு வருகின்ற நடவடிக்கையில் மிக தீவிரமாக ஈடுபட்டு உள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. இதன்படி ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து 11 மாவட்ட அமைச்சர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து 08 மாவட்ட அமைச்சர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து 03 மாவட்ட அமைச்சர்களும் நியமனம் பெறுகின்றனர்.

யாழ். மாவட்ட அமைச்சராக சிவஞானம் சிறிதரன், வன்னி மாவட்ட அமைச்சராக சார்ள்ஸ் நிர்மலநாதன், மட்டக்களப்பு மாவட்ட அமைச்சராக ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோரே பதவி பெற்று உள்ளன.

மாவட்ட அமைச்சர்களின் விபரம் வருமாறு:-
அனுராதபுரம் – எஸ்.எம்.சந்தசேன

குருநாகல் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

கொழும்பு – எஸ்.எம்.மரிக்கார்

கம்பஹா – அஜித் மான்னப்பெரும

கண்டி – மயந்த திஸாநாயக்க

பொலன்னறுவை – நாலக கொலொன்னே

அம்பாந்தோட்டை – நாமல் ராஜபக்ஷ

திருகோணமலை – இம்ரான் மஹரூப்

மொனராகலை – உதயஷாந்த குணசேகர

மாத்தளை – ரஜித் அலுவிஹாரே

பதுளை – வடிவேல் சுரேஷ்

மாத்தறை – மஹிந்த யாப்பா

காலி – ரமேஷ் பத்திரண

யாழ்ப்பாணம் – எஸ்.ஸ்ரீதரன்

புத்தளம் – ஹெக்டர் அப்புஹாமி

நுவரெலியா – திலகராஜா மையில்வாகனம்

திகாமடுல்லை – பைஸல் காஸிம்

மட்டக்களப்பு – ஞானமுத்து ஸ்ரீநேசன்

கேகாலை – துசிதா விஜேமான்ன

இரத்தினபுரி – பவித்ரா வண்ணயாராச்சி

களுத்துறை – பாலித்த தெவரப்பெரும

வன்னி – சார்ல்ஸ் நிர்மலநாதன்