தரகராக செயல்பட்ட இஷாரா

கெஹெல்பத்தர பத்மே தனது போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய்களை, சில நாட்களுக்கு ஒருமுறை ஒஸ்மனிடம் ஒப்படைக்கும் பணியை இந்த இஷாரா செவ்வந்தியே மேற்கொண்டு வந்துள்ளார் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் தனக்குக் கிடைக்கும் பணத்தை, ஒஸ்மன் என்ற நபர் தனது பல்வேறு வணிகங்களில் முதலீடு செய்து, அவற்றை சட்டபூர்வமான பணமாக மாற்றியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பத்மேயின் இந்த போதைப்பொருள் நெட்வொர்க் பணத்தை, இஷாரா செவ்வந்தியுடன் இணைந்து ஒஸ்மனிடம் கொண்டு சேர்ப்பதற்கு உதவியாக இருந்த மேலும் சில சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக  பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவவை கொழும்பு அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து படுகொலை செய்ய திட்டமிட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, தற்போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதேபோன்று, கம்பஹா ஒஸ்மன் என்பவரும் தற்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் நீண்டநேர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த பணப் பரிவர்த்தனைகள் மற்றும் மேலும் பல குற்றச் செயல்கள் தொடர்பாக பாதாள உலகக் குழுத் தலைவன் கெஹெல்பத்தர பத்மேயிடமும் சிறைக்குள் வைத்து தீவிர விசாரணை நடத்துவதற்கு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு திட்டமிட்டுள்ளது.