தலிபான்களின் எழுச்சியால் மத்திய கிழக்குக்கு அச்சுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் தலிபானின் எழுச்சி மத்திய கிழக்குக்கு ஒரு மாபெரும் அச்சுறுத்தல், மற்றும் இப்பகுதியில் உள்ள நாடுகள் வளர்ந்துவரும் அச்சுறுத்தலுக்கு பிராந்திய ரீதியிலான தீர்வொன்றைக் காணவேண்டும் என்று  யானேஸ் குமார் கூறியதாக ஏசியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உலகின் மிகப பயங்கரமான போராளிகள் குழு தலிபானே என்றும் அவர் கூறினார். பாகிஸ்தான் தலிபான்களென அறியப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான், தம் ஆப்கானிஸ்தான் சகாவுடன் சத்தியம் செய்துகொண்டது என்றும் அவர் தெரிவித்தார்.

தலிபான்கள்  காபூலில் பிரவேசித்ததை அடுத்து நகரின் புல்-இ-சர்க்கி சிறைச்சாலையில் இருந்து 5,000 கைதிகளை விடுவித்தது. இக்கைதிகளின் சகாக்கள் அல்-கவேதா மற்றும் ஐ.எஸ்.எஸ் போராளிகள்  என்பது குறிப்பிடத்தக்கது.