திருமணப் பதிவுகள்: கடந்த 15 ஆண்டுகளில் 28% சரிவு

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் (Department of Census and Statistics) அறிக்கையின்படி, 2010-ஆம் ஆண்டில் 200,985 ஆக இருந்த பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை, 2025-ஆம் ஆண்டில் 144,182 ஆகக் குறைந்துள்ளது. இது சுமார் 28  வீழ்ச்சியாகும்.

2020-ஆம் ஆண்டிற்கு முன்னதாக, பல ஆண்டுகளில் திருமணங்களின் எண்ணிக்கை 170,000-க்கு மேலாகப் பதிவாகியிருந்தது. இருப்பினும், கோவிட்-19 (COVID-19) பெருந்தொற்று காலத்தில் இந்த எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்து, 2020-ஆம் ஆண்டில் 143,808 ஆகக் குறைந்தது.

பெருந்தொற்றுக்குப்பின், 2021-ஆம் ஆண்டில் 162,628 ஆகவும், 2022-ஆம் ஆண்டில் 171,140 ஆகவும் திருமணப் பதிவுகள் மீண்டும் அதிகரித்திருந்தன. இருப்பினும், 2023-ஆம் ஆண்டில் 151,356 ஆகவும், 2024-ஆம் ஆண்டில் 139,290 ஆகவும் மீண்டும் சரிந்தன. இறுதியாக, 2025-ஆம் ஆண்டில் திருமணப் பதிவுகள் சிறிய அளவில் அதிகரித்து 144,182 ஆகப் பதிவாகியுள்ளன.

Leave a Reply