தென் லெபனானை இஸ்ரேல் ஆக்கிரமிக்கவுள்ளது

லிடனி ஆறு வரையிலான தென் லெபனானை இஸ்ரேல் ஆக்கிரமிக்கவுள்ளது. இப்பகுதியை பாதுகாப்பு வலயமென இஸ்ரேலிய பாதுகாப்பமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் செவ்வாய்க்கிழமை (24) வர்ணித்துள்ளார். லெபனானின் நிலப்பரப்பின் பத்திலொன்று பகுதி இப்பகுதி ஆகும். லிடனி ஆற்றின் மீதான ஐந்து பாலங்களை இஸ்ரேல் அழித்துள்ளதுடன், எல்லைக் கிராமங்களிலுள்ள வீடுகளையும் அழித்துள்ளது. 2000ஆம் ஆண்டு வரையில் தென் லெபனானை இஸ்ரேல் கட்டுப்படுத்தியிருந்தது.