தேயிலை ஏற்றுமதி முழுமையாக இடைநிறுத்தம்

குறித்த இரண்டு நாடுகளுக்கும் தேயிலை ஏற்றுமதி செய்யும் போது, பெற்றுக்கொள்ளும் பணம் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்கள், தேயிலை ஏற்றுமதியை நிராகரிப்பதாகவும் இதனால் முற்றாக தேயிலை ஏற்றுமதியை நிறுத்தியுள்ளதாக இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் ஜயந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த இரண்டு நாடுகளிலம் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையால், வேறு நாடுகள் ஊடாக இலங்கை தேயிலைக்கான பணத்தை செலுத்த முன்னர் திட்டமிட்டிருந்தாலும் ரஷ்யாவின் வங்கி கட்டமைப்புடன் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டாமென ஐரோப்பிய நாடுகளுக்கு பொருளாதார மற்றும் நிதித் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் இதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் 27 மில்லியன் கிரோகிராம் தேயிலையை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யும் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதுடன், உக்ரேனுக்கு வருடாந்தம் இலங்கையிலிருந்து 3 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரஸ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதியால் வருடாந்தம் 150 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இலங்கைப் பெற்று வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.