நிபந்தனை விதித்தது ஐ.எம்.எப்

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி மேற்​கொண்ட பேச்சுவார்த்தையின் பின்னரே, ஜனாதிபதி கட்டளையிட்டுள்ளார் என்றும் பிரதமர் அதற்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

எனினும், ஊடகங்களில் வெளியாகியிருக்கும் இந்த செய்தியை ஜனாதிபதி ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ராலை நீக்குவது சர்வ​தேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) நிபந்தனைகளில் ஒன்றாகும் என்றும், ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகளில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலந்தாழ்த்தாது இராஜினாமா செய்வது நல்லது, இல்லையேல் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டிய நிலைமை ஏற்படுமென அஜிட் நிவாட் கப்ராலுக்கு, உயர்மட்டத்தினர் அறிவுறுத்தியுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

அஜிட் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்து கொண்டதன் பின்னர், இன்றேல், நீக்கப்பட்டதன் பின்னர் ஏற்படும் வெற்றிடத்துக்கு நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல நியமிக்கப்படக்கூடும் என்றும் அறியமுடிகின்றது.