பிரமந்தனாறுகுளக் காணிகளும் பறிபோகும் அபாயம்

பிரமந்தனாறு  குளமானது, நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள நடுத்தர குளங்களில் ஒன்றாக காணப்படுவதுடன், 602 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள், பெரும்போகம் மற்றும் சிறுபோகப் பயிர்ச் செய்கைளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், நேற்று  (08) முதல், வனவளத் திணைக்களத்தால் நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான குளத்தின் நீரேந்து பிரதேசங்கள், குளத்தின் கீழான பொதுமக்களின் வயல் காணிகள், குளத்தின் வான் பகுதி என்பன வனப் பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டு, எல்லைகள் இடப்பட்டுள்ளன.