போதையில் சேவை ; 7 ஊழியர்கள் கைது

பிலியந்தலை, பிரதான பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் மற்றும் பிலியந்தலை நகரூடாக பயணிக்கும் தனியார் பேருந்துகளின் ஊழியர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனரா என்பது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே குறித்த ஏழு பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சோதனை நடவடிக்கை, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் விசேட நடமாடும் ஆய்வக வசதிகளைக் கொண்ட பேருந்தொன்றின் உதவியுடன் பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது. நுகேகொடை தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் மற்றும் பிலியந்தலை பொலிஸார் இணைந்து சுமார் 5 மணி நேரம் இந்தச் சோதனையை நடத்தினர்.

இதன்போது,

  • 120 (கஸ்பேவ – புறக்கோட்டை)
  • 255 (கல்கிசை – கொட்டாவ)
  • 162 (பிலியந்தலை – பண்டாரகம)
  • 341 (பிலியந்தலை – மகரகம)
  • 341/2 (கரதியான ஊடாக மகரகம)
  • 342 (பிலியந்தலை – கொட்டாவ)
  • 157 (கஹபொல – பிலியந்தலை)
  • 157/1 (பிலியந்தலை – மாகந்தன) ஆகிய வழித்தடங்களில் பயணிக்கும் பேருந்து ஊழியர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்தச் சோதனையின் போது மொத்தம் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் 170 பேர் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேரின் உடலில் நச்சுத்தன்மை கொண்ட போதைப்பொருள் இருப்பது ஆய்வகப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.