போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு மலே­ஷி­யாவில் திரட்­டப்­பட்ட நிதி தொடர்பில் விபரம் வேண்டும் வட மாகா­ண­சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் கோரிக்கை

இலங்­கையில் போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உதவும் நோக்கில் மலே­ஷிய தமிழர் பேரவை அமைப்­பினால் திரட்­டப்­பட்ட நிதி செல­வி­டப்­பட்­டமை தொடர்பில் விப­ரங்­களை அறியத் தரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வட மாகாண சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் கோரிக்கை விடுத்­துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்­கையில் போரால் பாதிக்­கப்­பட்­ட ­மக்­க­ளுக்­கு­ உ­தவும் நோக்கில் உலகின் பல்­வே­று ­நா­டு­க­ளிலும் பல ­அ­மைப்­புக்கள் பெருந்­தொ­கை­ நி­தியைத் திரட்­டி­வந்­துள்­ளன. அவ்­வ­கையில் கடந்த 2012 ஆம் ஆண்டு மலே­சி­யாவில் த­மிழர் பேரவை மலேஷியா என்ற அமைப்­பு­ பெ­ருந்­தொகைப் பணத்தை (1,000,000.00) மலேஷிய அர­சி­ட­மி­ருந்து பெற்­றி­ருக்­கி­றது.

இந்­த­ப் பணத்தொகை­யா­னது உண்­மை யில் எமது மக்­களைச் சென்­ற­டை­யு­மானால் நிச்­சயம் இன்று இங்­குள்ள மக்கள் தங்கள் வாழ்­வா­தா­ரத்­திற்குக் கையேந்தும் நிலை­யோ­ வ­று­மையின் உச்­சத்தில் தற்­கொ­லை­க­ளுக்கு தூண்­டப்­படும் துர்ப்­பாக்­கிய நிலையோ ஏற்­பட்­டி­ருக்­குமா என்ற ஏக்கம் எங்கள் இதயத் தைப் பிழி­கின்­றது.

போரின் காயங்கள் இன்னும் மாறா­த­ அ­வ­லங்கள் நிறைந்த இந்தச் சூழலில், மன உளைச்­ச­லு­டனும், உடல் அங்­கங்­களை இழந்­து­ வாழ்க்­கையின் அடுத்த கட்­ட­ ந­கர்வை நகர்த்தமுடி­யாத வறு­மை­யிலும் வாழு­கின்ற மக்­களின் பெயரால் திரட்­டப்­பட்ட நிதி எங்கே? மக்­களின் பிர­தி­நி­தி­யாக­ நாங்­களும் வட ­மா­கா­ண­ச­பையும் இருக்­கையில் யார் முலம் இந்த நிதி­ செ­ல­வி­டப்­பட்­டது? அல்­லது சேமிப்பில், கிடப்பில் போடப்­பட்­டுள்­ளதா என்ற கேள்­வி­க­ளுக்கு சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் கண்­டிப்­பாகப் பதி­ல­ளிக்கு­மாறு கேட்­டுக்­கொள்­கிறோம்.

எங்­களை பொறுத்­த­வரை மலே­சி­யாவில் இயங்கும் மலே­சியத் தமிழர் பேரவை எனும் குறித்த அமைப்­பினால் இங்கு எந்­த­வேலைத்திட்­டமும் மக்­களை சென்­ற­டைந்­த­தாக நாம் அறி­ய­வில்லை. அவ்­வாறு இடம்­பெற்­றி­ருந்தால் வர­வேற்கும் அதே­வேளை அது எந்த அடிப்­ப­டையில்? எந்த அமைப் பின் ஊடாக செயல்­ப­டுத்­தப்­பட்­டது என்­ பதை சம்­பந்­தப்­பட்ட தரப்­பினர் மக்­க­ளுக் குத் தெளி­வு­ப­டுத்­த­ வேண்டும் என்­பதை அறிய விரும்­பு­கின்றோம்.

மலே­ஷிய அர­சாங்கம் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட இலங்கைத் தமி­ழர்­க­ளுக்­காக உவந்­த­ளித்த இந்த பெருந்­தொகைப் பணத்தைப் பெற்­றுக்­கொண்­ட ­த­மிழர் பேரவை மலே­ஷியா அமைப்­பினர் நிச்­சயம் இதற்­கு­ரிய விளக்­கத்தை எமக்­க­ளிக்­க­வேண்டும் என கேட்­டுக்­கொள்­கிறேன்.

மேலும் அந்­த­ அ­மைப்பு ஷா ஆலம் எனும் இடத்தில் போரினால் பாதிக்­கப்­ப ட்­ட ­மக்­க­ளுக்­காக திரட்­டி­ய ­சுமார் ஒரு ­மில்­லியன் மலேஷி­ய ­ரிங்கட் பணம் என்­ன­வா­னது என்­ப­தையும் சுட்­டிக்­காட்­ட­ வி­ரும்­பு­கி றோம். அத்­துடன் வன்னிப் பிர­தேச மக்­க­ளுக்­காக இந்­த­ அ­மைப்பு பெற்­றுக்­கொண்ட நன்­கொ­டைகள் யாவும் என்­ன­வா­னது?

மக்­களின் பிர­தி­நி­தி­க­ளா­க நாம் இருக்க மூன்றாம் தரப்­பி­னரைக் கொண்டு ஒரு­ வேளை இந்தப் பணம் செல­வி­டப்­பட்­டி­ருந்தால் நிச்சயம் இதில் மக்கள் நன்மை அடைந்திருக்க மாட்டார்கள். மேலும், இது வரை மக்களுக்காக அவ்வாறான வேலைத் திட்டங்கள் எதுவும் நடந்ததாக நாம் அறிய வில்லை.

மக்களுக்காகப் பெற்றுக்கொள்ளப்பட்ட பணம் நிச்சயம் மக்களைச் சென்றடைய வேண்டும். இது தொடர்பாக உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைந்து பதில ளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.