மட்டு.பிறப்பு மற்றும் திருமண பதிவுக்கான நடமாடும் சேவை

இதன் போது மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில் இதுவரை காலமும் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்றுக்கொள்ளாத சுமார் 50 இற்கும் மேற்பட்டோருக்கான பதிவு சான்றிதழ்களை அவ்விடத்திலேயே வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது கிழக்கு வலயத்துக்கான பிரதிப் பதிவாளர் நாயகம் கே.நடராஜா, மனித உரிமை மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தின் கிழக்கு பிராந்திய இணைப்பாளர் பா.பரசுராமன், பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் கே.பேரின்ப நாயகம், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இந்த நடமாடும் சேவைக்கான அனுசரணையை மனித உரிமை மற்றும் அபிவிருத்திக்கான நிலையம் வழங்கியிருந்தது. இந்த நடமாடும் சேவையினை பிரதேச செயலக பதிவாளர் மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் இணைந்து ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.