மண்டைதீவில் 500 கி.கி மஞ்சளுடன் ஒருவர் கைது

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட மஞ்சளை கைமாற்றும் போதே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதான சந்தேக நபரை ஊர்காவற்றுறை பொலிஸார் ஊடாக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.