மாணவர்களை இலக்கு வைத்த மதனமோதகம் மீட்பு

பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு, எவ்வித அனுமதிப்பத்திரமும் இன்றி இந்தக் கடையில் மதனமோதக பக்கட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே இவை கைப்பற்றப்பட்டன.

இந்தச் சோதனையின் போது, ஒரு பெட்டியில் 25 பொதிகள் வீதம் அடைக்கப்பட்டிருந்த 48 பெட்டிகளும், சில்லறையாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மேலதிக 14 பொதிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஊவா மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன, பதுளை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் லக்சிறி விஜேசேன மற்றும் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலைமைப் பொலிஸ் பரிசோதகர் ரத்னசிறி பண்டார ஆகியோரின் ஆலோசனைக்கமைய இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதில் பொலிஸ் சார்ஜன்ட்களான செனவிரத்ன, சித்தீக், சுஜீவ, கமல் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் கபுகொட்டுவ ஆகியோர் பங்கேற்றனர்.

கைப்பற்றப்பட்ட மதனமோதக மாத்திரைகளையும், சந்தேகத்தின் பேரில் கடை உரிமையாளரையும் பசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply