தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த மினுவாங்கொடை நகர சபையின் தலைவர் அசேல விக்ரமாராச்சி, மாநகர சபைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மினுவாங்கொடை நகர சபையில் புதன்கிழமை (31) அன்று நடைபெற்ற சிறப்பு பொதுக் கூட்டத்தில், அவர் இவ்வாறு அறிவித்தார்.