மின்வேலியில் சிக்கி 62 வயது நபர் உயிரிழப்பு

சாமிமலை, பெயர்லோன் தோட்டத்தின் சின்ன சூரியகந்தை பிரிவைச் சேர்ந்த மாரிமுத்து கந்தசாமி (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். திருமணமாகி இரு பிள்ளைகளின் தந்தையான இவர், திங்கட்கிழமை (06) அன்று காலை 9.30 மணியளவில் தனது வேலைக்காக மீட்டியாகோட்டை பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குச் சென்றிருந்தார். அப்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடல் தற்போது மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவிக்கையில், உயிரிழப்பு தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

Leave a Reply