முதிரைக்குற்றிகளுடன் வாகனம் விபத்து: சாரதி மாயம்

குறித்த வாகனம் இரணை இலுப்பகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த போது அங்கு கடமையில் இருந்த பொலிஸாரால் நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் அது நிறுத்தாமல் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்நிலையில் புது குளத்திற்கு அண்மித்த பகுதியில்  விபத்துக்குள்ளான நிலையில் பொலிஸாரால் அவ் வாகனம் மீட்கப்பட்டது. வாகனத்தில் இருந்த 11முதிரைக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.  வாகனத்தின் சாரதி மாயமாகியுள்ள நிலையில் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.